பக்கம்:திருக்கோலம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#ಅಹಿಡಿಹTಉಹಿ - g

என்று:முன்பு ஒரு ப்ாட்டில் இந்தச் செய்தியைச் சொன்னர். தன் வெற்றியை நிலநாட்டுவதற்கு அவ்வாறு கவர்ந்து கொண்டாள். - - -

- தலைவர் அழியா விரதத்தை அண்டமெல்லாம்

பழிக்கும் படிஒரு பாகம்கொண்டு ஆளும்

பராபரையே [87)

என்று இந்த வெற்றியைப் பின்னும் எடுத்துரைப்பார். இங்கே, சிவபெருமானுடைய திருமேனியில் ஒரு பாதியைக் கவர்ந்து அங்கே குடிபுகுந்த பெருமாட்டியே’ என்று அதையே வேறு வகையில் சொல்கிருர், -

x பிரான் ஒரு கூற்றை மெய்யில்

பறித்தே குடிபுகுதும். பறித்து என்றது, வென்று கவர்ந்துகொண்டதைச் சுட்டியது. - -

அம்பிகை திருக்கரத்தில் ஐந்து மலரம்புகளே வைத் திருக்கிருள். அவளுக்குப் பைரவி என்பது ஒரு திருநாமம்.

பஞ்ச பாண பயிரவியே. - பைரவராகிய சிவபெருமானுடைய தேவியாதலின் பயிரவி என்ற திருநாமம் வந்தது. பன்னிரண்டு வயசுப் பெண்ணுக்குப் பயிரவி என்று பெயர். தன்ன எதிர்ப் போருக்குப் பயத்தை உண்டாக்குகிறவள் என்றும் பொருள் கொள்ளலாம். . . - . இவ்வாறு தேவியைப் புகழ்ந்து விளித்தவர் அவளுடைய திருவுருவத் தியானத்தால் பெற்ற பேற்றைச் சொல்ல வருகிருர்.

. அன்ன அழகிய திருக்கோலம் கொண்டு எழுந்தருளு கிருள், மனத்துக்கும் வரக்குக்கும் பொறிகளுக்கும் எட்டாதவள் அவள்; வேதத்தாலும் அறிய ஒண்ணுதவள்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/13&oldid=577952" இலிருந்து மீள்விக்கப்பட்டது