பக்கம்:திருக்கோலம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 - திருக்கோலம்

காலம் முழுவதும் வாழ்ந்து இவனைக் காப்பாற்றுவார் என்பது என்ன நிச்சயம்? அவர் திடீரென்று இறந்துபோனல் அவருடைய சொத்துக்கு உரிமை பெறுகிறவர்கள் அவர் செய்துவந்த தர்மங்களை அப்படியே செய்து வருவார்கள் என்று நம்ப முடியுமா? -

அந்த வள்ளல், ஏழைக்கு என்றும் குறை வராதபடி நிலத்தைத் தானமாகக் கொடுத்தால் அவன் எப்பொழுதும் பயனடையலாம். அப்போதுகூட, நிலத்தை உழுது பயிரிட்டு அறுவடை செய்யவேண்டும். அந்தச் சிரமத்திை யும் கொடுக்காமல் ஒருவர் எப்போதும் உடனிருந்து வேண்டிய பொருள்களையெல்லாம் தந்துகொண்டே இருக் கிருர் என்று வைத்துக்கொள்வோம். அவர் எப்போதும் உள்ளவர், எப்பேர்தும் செல்வம் உடையவர், அதை என்றும் இழக்காதவர் என்ருல் அவருடைய உதவியை என்றும் நம்பலாம்; எளிதாக நன்மை பெறலாம்.

அத்தகைய குறைவற்ற வாழ்வு தமக்குக் கிடைத் திருப்பதாக அபிராமி பட்டர் கூறுகிருர்,

அவருக்கு வேண்டியவற்றையெல்லாம் வழங்கும் காமதேனுவாக இருக்கிருள் அம்பிகை, அவள் எப்போதும் அவருடைய உள்ளத்தில் இருக்கிருளாம். அப்படி இருக்கும் போது எனக்கு என்ன குறை?? எனக் கேட்கிருர்,

அம்பிகை எத்தகையவள்? மிகச் சிறந்த போக வாழ் வைப் பெற்றிருக்கும் இந்திராதி தேவர்களுக்கே உபகாரம் செய்தவள். அவர்கள் சாவா மூவாப் பெருவர்ழ்வு பெற வேண்டும் என எண்ணினர்கள். எவ்வளவு செல்வம் இருந்தும் என்ன பயன்? அவற்றை அநுபவிக்க நீண்ட ஆயுள் வேண்டாமா? ஆகவே தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தார்கள். எளிதில் அமுதம் வ்ரவில்லை. எத்தனையோ தடைகள் எழுந்தன. பிறகு அமுதம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/132&oldid=578071" இலிருந்து மீள்விக்கப்பட்டது