பக்கம்:திருக்கோலம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறைவிலர் நிறைவு 123.

வந்தது. அப்போது மிகப் பெரிய சங்கடம் வந்து குறுக் கிட்டது. அமுதம் உண்பதற்கு அசுரர்கள் வந்து போட்டி யிட்டார்கள். அவர்கள் அறுபத்தாறு கோடி பேர். அவர் களும் சேர்ந்து கடைந்தவர்கள் அல்லவா? ஆகவே உரிமை கொண்டாடினர்கள். அவர்களும் அமுதத்தை உண்டு சாகாமல் இருந்துவிட்டால் தேவர்களுக்கு நித்தியமும் தொல்லேதான். என்ன செய்வது?

அவர்களுடைய இன்னலப் போக்க அம்பிகை மோகினி யாக எழுந்தருளினுள். திருமாலே மோகினிக் கோலம் தரித்து வந்ததாகப் புராணங்கள் கூறும், திருமாலும் அம்பிகையின் அம்சமாதலின் அம்பிகையே மோகினியாக வந்து அமுதம் வழங்கிளுள் என்று தேவிபரமான நூல்கள் சொல்லும். அமரர் வாழ்வு வாழ்வாக அவுனர் வாழ்வி: பாழாக அருளும் மோகினியாக அமுதபானம் ஈவாளே” (107)என்று தக்கயாகப்பரணி, அம்பிகையே மோகினியாக எழுந்தருளி வந்து அசுரர்களை மயக்கி, அமரர்களுக்கு அமுதத்தை வழங்கிள்ை என்று சொல்கிறது.

உலகில் உள்ளவர்க்கு வேண்டிய பொருள்களை நல்கும் தேவர்கள் பேராற்றல் வாய்ந்தவர்கள்; பெரும் போகம் துய்ப்பவர்கள். அவர்களுடைய குறையைப் போக்க மோகினியாக வந்து பாற்கடலில் தோன்றிய அமுதத்தை வழங்கினவள் என்றல் அவள் செய்யும் உதவியின் பெருமை எவ்வளவு பெரிது என அறிந்து கொள்ளலாம்.

விண் மேவும் புலவருக்கு - விருந்தாக வேலே மருந்தானதை நல்கும் மெல்லியலே! . .

அத்தகைய பெருமாட்டி எனக்குக் குறைவிலா நிறைவை வழங்கிள்ை’ எனச் சொல்ல வருகிருர், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/133&oldid=578072" இலிருந்து மீள்விக்கப்பட்டது