பக்கம்:திருக்கோலம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 திருக்கோலம்

அம்பிகை பல வகையான தாமரைகளில் எழுந்தருளி யிருக்கிருள் என்பதைப் பல பாடல்களில் அபிராமிபட்டர் முன்பு சொல்லியிருப்பதைப் பார்த்திருக்கிருேம். அவள் அநாதி காலமாக ஒளி வளர் தாமரையில் வீற்றிப்பதளுல் அவளைப் பத்மாஸன? என லலிதா சகசிரநாமம் கூறும். அது தேவிக்குப் பழைய வாச ஸ்தானம். அந்த அற்புத மான தாமரையில் வீற்றிருப்பவள் இப்போது வேறு ஒரு தாமரையில் வந்து புகுந்தாள். சில காலம் இருந்தாள் என்ரு சொல்வது? அங்கேயே தங்கிவிட்டாள்; தன்னுடைய பழைய இருப்பிடமாகிய தாமரையாகவே எண்ணித் தங்கி விட்டாள்.

அந்தத் தாமரை எது? அபிராமிபட்டருடைய உள்ள மாகிய தாமரைதான் அது. அம்பிகை இருக்கும் இடம் எங்கே என்று தேடி அவளை அடைய அவர் வருந்தவில்லை. அம்பிகையே அவருடைய மனம் என்னும் தாமரையை நாடி வந்து குடிபுகுந்து விட்டாள். அவள் கருணையை என்னவெனச் சொல்வது!

அவள் எழுந்தருளியிருக்கும் தெய்விக ஒளித்தாமரை எங்கே? இந்த மனத்தாமரை எங்கே? ஞானமணம் வீசி ஆனந்தத் தேன் பில்கி ஒளிவிடும் தாமரையில் இருப்பவள், எவ்வளவோ வகையான மாசுகளை உடைய மனத் தாமரை பில் வந்து வீற்றிருக்கிருள்! இதைவிட வியப்பு உண்டாக்கும் சிகழ்ச்சி ஏது? அவளுட்ைய அதிசயமான் கருணையே அதற்குக் காரணம். தன்னுடைய பழைய இருப்பிடத் ”கயே அமள் மறந்து விட்டாள் போலும் இதையே அந்த இருப்பிடமாகக் கொண்டு விட்டாள். - .

வருந்தா வகை என் மனத்

தாமரையினில் வந்து புகுந்து இருந்தாள், பழைய இருப்பிடமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/134&oldid=578073" இலிருந்து மீள்விக்கப்பட்டது