பக்கம்:திருக்கோலம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறைவிலா நிற்ைவு 125.

எனப் பாடுகிறர் அபிராமியட்டர். அருணும்புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும், தருணும்புயமுகிலத். தையல் நல்லாள் (58) என முன்பும் சொல்லியிருக்கிரு.ர். வருந்தா வகை என்பது, நான் மிகவும் சிரமப்பட்டுத் தேடிச் சென்று வருத்தமுருதபடி எனப் பொருள் கொள்வதற். குரியது. அதற்கு மற்ருெரு பொருளும் சொல்லலாம்; "என் மனத்தில் பலவகைக் கவலைகளும் வருத்தங்களும் இருந்தன; அவற்ருல் நான் வருந்தாமல் இருக்கும்

பொருட்டு என் மனத்திலே வந்து அமர்ந்து கொண்டாள்?

எனவும் பொருள் கொள்ளலாம்.

அம்பிகையின் திருவடி மட்டும் அன்றி, அவளே வந்து உள்ளத்தில் குடிகொண்டு விட்டமையால் எந்த விதமான வருத்தங்களும் இல்லாமற் போயின. -

அம்பிகை குறைவிலா நிறைவாக இருப்பவள். உலகில் ஒரு பொருளால் குறையுடையவன் அதை மிகுதியாகப் படைத்த வேறு ஒருவனிடம் போய்க் கேட்கிருன், அவன் தன்னிடம் கேட்டவனுக்கு ஒரளவு பொருள் தருவான். ஆனல் தான் தன் குறையைப் போக்கிக்கொள்வதற்குத் தன்னிலும் சிறந்த செல்வனே நாடுவான். ஒரு குறைவும் இல்லாமல் பூரண நிறைவோடு இருப்பவர் யாரும் இல்லை. ஏதாவது குறை இருக்கும். குறையிருந்தால் கவ8லயும் ஆசையும் இருக்கும். அதுமட்டுமல்ல. மனிதனுக்கு எத்தனையோ பொருள்கள் வேண்டியிருக்கின்றன. எல்லா வற்றையும் ஒருசேரக் கொடுக்கிற செல்வன் யாரும் இல்லை. நிர்ம்பப் பொருள் கொடுத்தால் எல்லா வ்கையான பண்டங் களையும் பெறலாம் என்று தோன்றும். மனிதனுக்கு வேண்டிய எல்லாவற்றையும் பொருளினல் வாங்கிவிட முடியாது. ஒருவருக்குப் புத்திரப்பேறு இல்லை; பணம் கொடுத்தால் பிள்ளையைப் பெற முடியுமோ? ஒருவன் ஞானம் இல்லாமல் இருக்கிருன்; பணத்தைக் கொண்டு. விலைக்கு ஞானத்தை வாங்கிவிட முடியுமா? ஆகவே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/135&oldid=578074" இலிருந்து மீள்விக்கப்பட்டது