பக்கம்:திருக்கோலம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியாாககு அடியாா பெறும் பயன்

மகளிருக்கு எந்த எந்த அவயவங்கள் பெருத்திருக்க வேண்டும், எவை எவை சிறுத்திருக்க வேண்டும் என்று சாமுத்திரிகா லட்சண நூல் சொல்கிறது. இந்த நாட்டில் எந்த மொழியில் பெண்களே வருணித்தாலும் அவர்கள் இடை மிகச் சிறியதென்றும், நகில்கள் மிகப் பெரியன வென்றும் புலவர்கள் கூறுவார்கள். எல்லா மங்கையரிலும் மேலான அங்க லட்சண நிறைவுடையவள் அம்பிகை. அவள் ஸர்வாங்க எலாந்தரி; அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத,

வல்லி’ என்று அபிராமியட்டர் பாடுவார். .

சின்னஞ்சிறு குழந்தையின் உள்ளத்தோடு தாயைத் தரிசிக்கிறவர் அவர். அன்னேயுடன் நெருங்கிப் பழகும். இளங்குழந்தை அவளுடைய அங்கங்களைப் பார்க்கையில் விகார எண்ணமே எழாது. ஞானியர் அப்படித்தான் உலகத்து மாதர்களைப் பார்ப்பார்கள். குழந்தைத் தன்மையை உடையவர்கள் ஞானிகளும் பக்தர்களும். -

இப்போது அபிராமியட்டர் அன்னையின் வடிவத்தைத். தியானிக்கிருர். அவள் இடையைக் காண்கிருர். அது. மின்னல்போல மிக மிக மெல்லியதாக இருக்கிறது. எமின்னேரிடையாள்’ என்று அம்பிகையைத் தேவாரத்தில் பாடுகிறர்கள் அருளாளர்கள். மிகவும் மென்மையும் நுட்பமும் பொருந்திய இடை அது. - . . . . . . . - “....:

மெல்லிய நுண் இடை, மின் அனேயாளை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/138&oldid=578077" இலிருந்து மீள்விக்கப்பட்டது