பக்கம்:திருக்கோலம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார்க்கு அடியார் பெறும் பயன் 129

இனி அன்னையின் நகில்ககாச் சொல்ல வருகிருர், காமேசுவரனும் காமேசுவரியும் ஒன்றி இணேகிறவர்கள். சிவ பெருமான் தவயோகியைப் போன்ற தோற்றம் உடையவன்; விரித்த சடையை உடையவன். தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே’’ என்ற புறநானூறு அவனுடைய சடையையும் தவக்கோலத்தையும் எடுத்துச் சொல்கிறது,

உலகத்தில் உள்ள தவமுனிவர்களுக்கும் அவனுக்கும் இடையே ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது. சடா பாரத்தையுடைய தவமுனிவர்கள் பெண்ணுசையை நீத்த வர்கள்; பெண்கள் பக்கமே கோகாதவர்கள். இங்கே சிவபெருமான் சடையை அணிந்து தவக்கோலம் பூண்டா லும் அவன் ஒரு பெண்ணுேடே இருக்கிருன்; அம்பிகையுடன் இருக்கிருன். மங்கையோ டிருந்தே யோகுசெய் வானே?? என்று அவனேப் பாடுவார்கள். அந்த மங்கையை அவன் அணைந்து கொள்வான்; அவள் திருமார்பைத் தழுவுவான்; அவளுடைய நகில்களைத் தழுவி இன்புறுவான். அந்த நகில்கள் பொன் நிறம் பூத்து ஒளிரும். மென்மையும் பொன்னிறமும் உள்ள அந்த நகில்கள் அம்பிகையின் அழகை மிகுதிப்படுத்துகின்றன.

விரிசடையோன் - புல்லிய மென்முலே பொன் அனேயாளே.

இத்தகைய பெருமாட்டியை வழிபட்டால் உண்டாகும் பயன் மிகப் பெரிது. மோட்ச சாம்ராஜ்யமே கிடைக்கும். அவளுடைய திருவடியைப் புகலாக அடைந்தவர்கள் பெறும் பேறு இருக்கட்டும். அந்த அடியார்களுக்கு அடியார்களாக இருக்கும் அவர்களுக்கு எத்தனே பெரிய பதவி கிடைக்கும், தெரியுமா? . . -

ஒரு பெரிய பணக்காரர் வீட்டில் பல வேலக்காரர்கள். இருக்கிருர்கள். அவர்களுக்கெல்லாம் அந்தச் செல்வர்

தி-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/139&oldid=578078" இலிருந்து மீள்விக்கப்பட்டது