பக்கம்:திருக்கோலம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 திருக்கோலம்

பரமரகசியமான பரதேவதை, சர்வ குகடிமமாக உள்ளவள்; தனக்கென்று வடிவம் இல்லாதவள்: என்றலும், அன்பர்கள் கண்னும் கருத்தும் கொள்ளும்படி, அழகிய திருவுருவத்தை மேற்கொள்கிருள். ஒரு பொருளுக்கு நாமமும் உருவமும் இல்லாவிட்டால் அதை மனம் பற்றது. நாமரூப நாட்ட முடையது மனம், அம்பிகை மனமுடைய மனிதர்கள் தன்னத் தியானிக்கும் பொருட்டு வடிவம் கொண்டு வருகிருள். சகுணப்பிரம்ம உபாசஆனயின்றி நிர்க்குணப் பிரம்மரநுபவம் கிட்டாது. மனம் இருக்கிறவரையில் ஈசுவர உபாசன செய்ய வேண்டும். அம்பிகை தன் பக்தர்கள் தன்னைத் தியானித்து உய்ய வேண்டும் என்று கருதித் தன் உருவத்தை அவர்களுக்குக் காட்டுகிருள். அந்த உருவத்தை அவர்கள் சொல்ல, விக்கிரக வடிவத்தில் நாம் வழிபடுகிருேம். -

வெளியிலே காணும் கோலத்தை உள்முகப்படுத்தித் தியானம் பண்ண வேண்டும். அம்பிகையின் திருக்கோலு தரிசனத்துக்குப் பயன் அந்தக் கோலத்தைத் தியானம் செய்வதுதான், இல நிறையப் பரிமாறி வைத்திருக்கும் விருந்துணவைக் கண்ணில்ை கண்டால் போதுமா? அதை 'உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் அதன் சுவை தெரியும், பசி தீரும். வெளியில் காணும் வடிவத்தை உள் முகத்தே தியானித்துப் பழகினல் அன்ன உள்ளே இயங்கு இாள்; நடனமாடுவாள்; புன்னகை பூப்பாள்; பேசுவாள். வெளியிலே தரிசிக்கும் அளவிலே நின்றுவிட்டால் பய னில்ஜல், அந்தர்முகளிலமாராத்யா. பஹிர்முகல-துர்லபா’ என்று லலிதா சகசிரநாமம் கூறுகிறது. உள்முகத்தே அவள் , திருக்கோலத்தை நிறுத்தித் தியானம் புரிய வேண்டும். -- . . . . . . . . . . ; - . .

அவள் வடிவம் முழுவதையும் உள்ளத்தே கலேயாமல் நிறுத்துவது என்பது எளிய காரியம் அன்று. ஆலுைம் பல காலும் பயிற்சி பண்ணி, மனத்தை வெளியே திரியாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/14&oldid=577953" இலிருந்து மீள்விக்கப்பட்டது