பக்கம்:திருக்கோலம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I80 திருக்கோலம்

நிறையச் சம்பளம் கொடுக்கிருர்; அவ்வப்போது அன்பளிப்பு கள் வழங்குகிருர். அவர் வீட்டிலுள்ள தோட்டக் காரனுக்கு 500 ரூபாய் சம்பளம். அவன் பெரிய வீட்டைக் கட்டிக் கொண்டிருக்கிருன், அவன் வீட்டில் வேலை செய்யும் வேலேக்காரிக்குத் தீபாவளிக்கு நல்ல புடைவை எடுத்துத் தருகிறன். இந்தச் சிறப்பெல்லாம் முன் சொன்ன செல்வரின் மதிப்பை எடுத்துக்காட்டுபவை. அந்தச் சேல்வரைப்பற்றிப் பேசும் போது, 'அவருடைய தோட்டக்காரன் வீட்டு வே8லக்காரிக்குத் தீபாவளிக்குப் பட்டுப் புடைவை கிடைக்கிறதையா!' என்று சொல் வார்கள்.

அதுபோல இங்கே அபிராமிபட்டர் சொல்கிருர். *அம்பிகையின் அடியார்களுக்கு அடியா களே பெரிய பதவிகளே அடைவார்கள்’ என்கிருர். அப்படியால்ை அடியர்ர்க்ள் எவ்வளவு சிறந்த பதவியை அடைவார்கள் என்பதை நாம் ஊகித்துக் கொள்ள வேண்டும்.

அடியார்கள் என்ன செய்கிருர்கள்? வாய் படைத்த பயன் அம்பிகையைப் புகழ்வதுதான் என்று உணர்ந்தவர்கள் அவர்கள். யார் ஒரு செயலே நன்ருகச் செய்து முடிக்கிருர் களோ அவர்களைப் பாராட்டிப் புகழ்வது வழக்கம். யார் ஈகையிற் சிறந்தவர்களோ அவர்களுக்குப் புகழ் உண்டாகும். "ஈவார்மேல் நிற்கும் புகழ்' என்பது குறள், உலகத்திலும் சரி, தேவலோகத்திலும் சரி, யார் எந்தக் காரியம் செய் தாலும், அவ்வாறு அவர்கள் செய்வதற்குரிய ஆற்றலே அளிப்பவள் பராசக்தி. அவள் ஆற்றல் அளிக்காவிட்டால் யாராலும் ஏதும் செய்ய முடியாது. சிவமெனும் பொருளும் ஆதி சத்தியொடு சேரின் எத் தொழிலும் வல்லதாம், அவள் பிரிந்திடின் இயங்குதற்கும் அரிதாம்?? என்று செளந்தரியல்கரி சொல்கிறது. அப்படியே மனிதரும் தேவரும் படைத்த பொருள்கள் யாவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/140&oldid=578079" இலிருந்து மீள்விக்கப்பட்டது