பக்கம்:திருக்கோலம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார்க்கு அடியார் பெறும் பயன் 131

அம்பிகை தன் பெருங் கருணையில்ை வழங்கியவை. எல்லாச் செயல்களுக்கும் மூலகாரணமாக இருப்பதலுைம், எ ல் லோ ரு க் கும் எல்லாவற்றையும் வழங்குவதலுைம் பாராட்டும் புகழும் உண்மையில் அவளேயே சேர்வதற் குரியன. எல்லாம் அம்பிகையின் செயல் என்றும், நாம் அடைந்தவை யாவும் அன்னே அருளியவை’ என்றும் உணர்ந்தவர்கள் அடியார்களாதலின் அவர்கள் அவளேயே புகழ்கிருர்கள். - - -

அவர்கள் வாயால் புகழ்ந்து உடம்பால் வணங்குகிறர் கள்; பூஜை செய்கிருர்கள். வேதம் இன்னபடி அம்பி கையைத் தொழவேண்டும் என்று சொல்கிறது. அவளே நன்கு அறிய முடியாத சிறியவர்களாகிய நமக்கு வழிகாட்டு. வது வேதம். அதுதான் அம்பிகையை அடையும் நெறியை நமக்குக் காட்டுகிறது. அது சொல்லியவண்ணம் அடியவர். கள் அம்பிகையைத் தொழுகிறர்கள். - . . .

புகழ்ந்து, மறை சொல்லிய வண்ணன்

தொழும் அடியாரை. -

மிகப் பெரியவர்களாகிய அடி ய வ ர் க ளே ப் போல எல்லோரும் ஆக முடியுமா? பழக முடியுமா? மறையை அறிந்து, அது எவ்வாறு வழிபடவேண்டுமென்று சொல் கிறதோ அதைத் தெரிந்து, அன்னேயை உபாசன பண்ணு வது எளிய காரியல் அன்று. அப்படியால்ை மற்றவர்கள் உய்ய வேண்டாமா? அதற்கு வழி உண்டு. -

கண்ணில் காண முடியாத அம்பிகையின் பெருமையை அறிவது அரிய காரியம். என்ருலும் அவள் பெருமையை அறிந்து வழிபட்டு அவள் அருளைப் பெற்ற அடியார்களே நாம் அனுகலாம். அவர்கள் இந்த உலகத்தில் நம்மோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/141&oldid=578080" இலிருந்து மீள்விக்கப்பட்டது