பக்கம்:திருக்கோலம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாருத நிலை

ஒருவன் தன் வீட்டின் பின்பக்கத்தில் ஓரிடத்தில் கிணறு வெட்டத் தொடங்கினன். இருபதடி வெட்டிஞன். அப்பொழுது ஒரு நண்பன் வந்து, இங்கே வெட்டக் கூடாது; இது குத்தலான இடம்’ என்று சொன்னன். உடனே வேறு ஒர் இடத்தில் கிணறு வெட்டத் தொடங் கின்ை. அங்கும் இருபதடி வெட்டின்ை. அப்பொழுது மற்கிருருவன் வந்து, இந்த இடம் சரியான கோணம் அல்ல; இங்கே வெட்டில்ை குடும்பத்துக்கு ஆகாது” என்றன். மறுபடியும் வேறு இடத்தில் வெட்டத் தொடங் கின்ை. இப்படியே ஒவ்வோர் இடத்திற்கும் ஒவ்வொருவன் ஒவ்வோரு குறை சொல்ல, ஆறு இடங்களில் வெட்டின்ை. இன்னும் தண்ணிர் கண்டபாடில்லே. -

பக்கத்து வீட்டுக்காரன் 35 அடி வெட்டினன், தண்ணிர் வந்து விட்டது. முதலில் சொன்னவன் 120 அடி வெட்டியும் தண்ணிர் கிடைக்கவில்லை. காரணம் என்ன? அவன் ஒரே இடத்தில் வெட்டவில்லே. வெவ்வேறு இடங்களில் அரை குறையாக ஆயிரம் அடி வெட்டிலுைம் அவனுக்குத் தண்ணிர் கிடைக்காது. மற்றவனே ஒரே இடத்தில் வெட்டினமையால் தண்ணிர் கிடைத்தது. -

இடைவிடாமல் ஒருமுகமாக முயற்சி செய்தால்தான் நல்ல பயனைப் பெறலாம். மனிதன் செய்யும் எல்லா வகை யான முயற்சிகளுக்கும் இது பொருந்தும். தெய்வத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/144&oldid=578083" இலிருந்து மீள்விக்கப்பட்டது