பக்கம்:திருக்கோலம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாருத நில 1e៩ உபாச்ன செய்யும் விஷயத்தில் இந்த ஒருமைப்பாடு மிகவும் அவசியமானது. எல்லா வடிவங்களிலும் ஒரே கடவுள்தாம் இருக்கிருர் என்ருலும், குறிப்பிட்ட மூர்த்தியை இடைவிடா மல் உபாசன செய்தால்தான் பயன் கிடைக்கும். பூமிக்கு அடியில் எங்கே வெட்டினுலும் தண்ணிர் வருமானலும் குறிப்பிட்ட ஒரிடத்தில் விடாமல் வெட்ட வேண்டும்,

ஒன்றே நினைந்திருந்தேன்; ஒன்றே துணிந்

தொழிந்தேன் ஒன்றேனன் உள்ளத்தி னுள் அடைத்தேன்??

என்று காரைக்கால் அம்மையார் சொல்கிருர்,

அபிராமிபட்டர் அவ்வறு அம்பிகையை உபாசனே பண்ணியவர். பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும்

வெட்டான்’ என்பது பழமொழி. அபிராமிபட்டர் ஒரே மரத்தைக் கண்டவர். அந்தக் கற்பக மரந்தான் அம்பிகை.

பிேடித்தாலும் புளியங்கொம்பைப் பிடிக்கவேண்டும்? என்பார்கள். அப்படி, சக்தியுள்ள தெய்வத்தைப் பற்றிக் கொண்டவர் அவர். சக்தி அளிக்கும் தெய்வம் அம்பிகை. அவளே எல்லாச் சக்திகளுக்கும் மேலான சக்தி; பராசக்தி அல்லவா? -

ஆண்டுக்கு நூறு கலம் விளையும் நன்செய் நிலத் தைப் பெற்று அதில் உழுது பயிரிட்டு விளேவு எடுத்தவன், அதை விட்டுவிட்டு அற்பமான புன் செய் நிலங்கண்க் கொள்ளுவான? அபிராமிபட்டர் தாம் பற்றிய அன்னே பல பெரியவர்களால் ஆசிரயிக்கப்பெற்ற பெருமாட்டி என்பதை நன்கு உணர்ந்தவர். அந்த உணர்வில்ை அவளை வழி பட்டார். சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் என்னும் மூன்று தொழில்களேயும் செய்பவர்கள் பிரம்ம விஷ்ணு ருத்திரர்கள். அவர்களைத் திரிமுர்த்திகள் என்றும், மும்முதற் கடவுளர் என்றும் கூறுவர்; 'மும் முதற் கடவுளும் அடித்தொழும் பாற்ற' என்றுகுமரகுருபர சுவாமிகள் அவர்களேக்குறிப்பார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/145&oldid=578084" இலிருந்து மீள்விக்கப்பட்டது