பக்கம்:திருக்கோலம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 திருக்கோலம்

அந்த மூன்று பெரிய மூர்த்திகளும் அம்மையை வழிபடுகிறர் கள். அம்பிகை முழுமுதற் கடவுள்; மும்முதற் கடவுளுக்கு மேலே, எல்லாத் தொழில்களேயும் தன் அருள் கொண்டு அவர்களே இயற்றச் செய்து வீற்றிருக்கும் பரதேவதை.

அவளுடைய திருவோலக்கத்தைப் பார்த்தால் இது தெரியவரும். அவள் வீற்றிருக்கையில் அவளுக்கருகில் இந்த மூன்று பேரும் நின்று ஏவல் கேட்பார்கள். அவர்களுக் கப்பால் இந்திரன் கைகட்டி வாய்புதைத்து நிற்பான். வருணன், வாயு, அக்கினி யாவரும் பணிந்தபடி இருப் பார்கள்; துவாதசாதித்தியர்கள், ஏகாதச ருத்திரர்கள், அஷ்டவசுக்கள், அசுவினி தேவர்கள் யாவரும் அன்னேயின் ஏவலர் குழுவில் நிற்பார்கள். இப்படி எல்லாத் தேவரும் போற்றும் பெருமாட்டி அவள். அவளுடைய திருவருளேயே தம்முடைய பலமாகப் பெற்றவர்கள் அத்தேவர்கள். அவர் களுக்கு அம்பிகை தன் புன்முறுவலேக் காட்டி அருள் பாலிக் கிருள். முதல் தேவர் மூவரும் வேறு தேவர்கள் யாவரும் போற்றப் புன்முறுவல் பூத்த திருமுகத்தோடு எழுந்தருளி யிருக்கும் பரமேசுவரி அபிராமி,

இந்தக் காட்சியை மனத்தில் கொண்டு அன்னேயைத் துதிக்கிருர் அபிராமிபட்டர்,

முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும்

முகிழ்நகையே!

அவளுடைய பெருமையை அறிந்து அவளேயே பற்றுக் கோடாகப் பற்றிக்கொண்டார் அபிராமிபட்டர். அப்படிப் பற்றிக் கொண்டது தம்முடைய முயற்சி என்று அவர் எண்ணவில்லை. அம்பிகையே அவரை வழிப்படுத்தித் தன்னைத் தியானிக்கச் செய்து தன் வழியே அவரை நடக்கும் £iiq. அருளினுள் என்று சொல்கிருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/146&oldid=578085" இலிருந்து மீள்விக்கப்பட்டது