பக்கம்:திருக்கோலம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாருத நிகல் 189

உன்றன் இதத்தே ஒழுக அடிமை கொண்டாய்.

அம்பிகைக்கு அடிமையாகி அவள் நடத்தும் நெறியிலே செல்பவர்கள் மனநிறைவு பெறுகிருர்கள்; இன்பமே எந்: நாளும் துன்பம் இல்லே’ என்ற நிலையை அடைகிருர்கள், அப்படி அநுபவத்திலே அருளின்பத்தை அடைந்த பிறகு வேறு ஒன்றைப் பற்றலாம் என்ற நினைவு வருமோ? :

ஆரம்ப காலத்தில் அம்பிகை மூவரும் போற்றும் தேவி என்று அறிந்தார்; அடியார் தொடர்பால் அது உண்மை என்பதை உணர்ந்தார். பிறகு உபாசஆனயில் ஈடுபட்டார். அவர் உள்ளம் உருகியது; அம்பிகை தன் திருவடியை, அங்கே பதித்தாள். அவர் வாழ்க்கை நெறியே மாறி விட்டது; இப்போது அவர் அபிராமி சமய நெறியிலே பயணம் செய்தார். அதன் விளைவாக அருளேப் பெற்ருர். முன்பு காதிகுலே கேட்டது உண்மை என்பதை இப்போது அநுபவத்திலே உணர்ந்தார். அதன் பிறகு அந்த நெறியை விடத் தோன்றுமா?

இனிப்புச் சுவையைத் தேடி அலேகிறவனுக்குச் சிறிது சர்க்கரை சேர்ந்த பொருள் கிடைக்கிறது. அதை இனிய பண்டம் என்று உண்ணுகிருன். இன்னும் ஒருவன் சர்க்கரையையே உண்ணுகிருன். பின்னும் ஒருவன் கற்கண்டை உண்ணுகிறன். வேறு ஒருவனுக்கு நல்ல தேன் கிடைக்கிறது. அது எல்லாவற்றையும்விட இனிமை, மிகுதியானது. அதை உண்ணப் புகுந்த பிறகு, மற்றவர்கள் வேறு ஒன்றைக் காட்டி, 'இதுதான் இனிப்பு; இதுதான் இனியது’ என்று கரடியாகக் கத்திலுைம் அதைக் கைவிடு, வானே? மற்றவர்கள் கூறுவதைக் கேட்டு உள்ளுக்குள்ளே நகைத்துக்கொள்வான். -

அபிராமியட்டர் அந்த நிலையில் இருக்கிறர். இனி வேறு. பலரும் தாம் கடைப்பிடிக்கும் மதம் அல்லது மார்க்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/149&oldid=578088" இலிருந்து மீள்விக்கப்பட்டது