பக்கம்:திருக்கோலம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முர்ண்பாடுகள் 143

வேறு யாருக்கும் இல்லை. அவளுடைய அங்கங்களின் வளப்பமும் அத்தகையதுதான். காலத்தால் மாருதது அம்மையின் அழகு, காலத்தின் சுவடுகளே மனித உடலத் தில் பார்க்கிருேம். ஆல்ை அம்பிகை காலத்துக்கு அப்பாற் பட்டவள். காலத்தின் கோடுகள் அவளே அண்டுவதில்லே. என்றும் தளர்ச்சி அடையாத அங்கங்களை உடையவள் அபிராமியன்னே.

உலகத்தில் உள்ள பெண்களின் நிலையையும் அம்பிகை யின் நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் வியப்பாக இருக்கும்; உலகியலுக்கு முரணுகத் தோன்றும். அவளைப் பற்றிச் சொல்லும் இயல்புகளே ஒன்றுக்கு ஒன்று முரண் பாடாகத் தோன்றும். இது என்ன வேடிக்கை! சிரிப்புக்கு இடமானது அல்லவா?’ என்று நினேக்கும்படியாக அவை இருக்கும். -

இந்த நகைப்புக்குரிய இயல்புகளே அபிராமிபட்டர் சொல்லுகிருர். இப்படியெல்லாம் சொல்வது நகையே, என்று தொடங்குகிறர்.

நகையே இஃது.

எதைச் சொல்கிறீர்கள்?’ என்று நாம் கேட்கிருேம். அவர் சொல்கிருர்:

குழந்தைகளைப் பெற்ற தாய் ஒருத்தியின் நகில்கள் தாழ்ந்திருக்கும். மங்கைப் பருவப் பெண்ணுக்குத்தான் தாமரை அரும்பு போல இருக்கும். அம்பிகை என்பதே தாய் என்ற பொருளுடையது. அவள் எத்தனை பேருக்குத் தாய் தெரியுமா? அவள் பிரமன் முதல் புழுவரைக்கும் உள்ள எல்லோருக்கும் தாய், ஆப்ரஹ்ம கீட ஜநநீ (35) என்பது அவள் திரு.நாமங்களில் ஒன்று. அநேக கோடி ப்ரஹ்மாண்டங்களையும் பெற்றவள் அவள். அநேக கோடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/153&oldid=578092" இலிருந்து மீள்விக்கப்பட்டது