பக்கம்:திருக்கோலம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 திருக்கோலம்

கூறுதல் சிரிப்புக்கு இடமாம்; அவளுக்கு முடிவும் இல்லை; அந்த முறைப்படியே பிறவியும் இல்லே; அப்படி இருக்க, அவரே மலைக்கு மகள் என்று கூறுவது வீணே; இங்ங்னம் அவளுடைய இயல்புகளே ஆராய்ந்து பிறகு விரும்புவது என்பது நம் அறிவாற்றலுக்கு மிஞ்சிய செயலாகும். -

அம்பிகையின் உருவத்தோற்றமும் செயலும் இயல்பு களும் முரண்பாடு உடையவையாகத் தோன்றுகின்றன. என்று சமத்காரமாகச் சொன்னர். -

நகை-சிரிப்புக்குக் காரணம்; காரணத்தைக் காரியமாக உபசரித்தது. இஃது என்பது பின்வருவனற்றைக் குறித்து நின்ற தொகுதி ஒருமை. முகை என்பது பொதுவாக இருப் பினும் தாமரையரும்பு என்று கொள்ள வேண்டும். மான். மான் கண்; ஆகுபெயர். அந்த வகையே பிறவியும்-இல்லை . என்று சொல்வனவற்றின் இனமே பிறவியும்; பிறவியும் t இல் என்று, இல் என்னும் சொல்லே நடு நிலை விளக்காகக் கொண்டு பொருள் செய்வதும் பொருந்தும். வம்பு-வீண், எங்கும் இல்லாத புதுமை என்றும் கொள்ளலாம். மிகை. அளவுக்கு மிஞ்சிய செயல்; அப்பாற்பட்ட செயல். நாடி. ஆராய்ந்து; நோய்நாடி நோய்முதல் நாடி (குறள்) என்று அப்பொருளில் வருவது காண்க; சோதனை செய்து என்றபடி, விரும்புவது மிகை.1

அம்பிகையின் இயல்புகள் அறிவாராய்ச்சிக்கு அப்பாற். பட்டவை என்பது கருத்து.

இது அபிராமி அந்தாதியில் 98-ஆம் பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/158&oldid=578097" இலிருந்து மீள்விக்கப்பட்டது