பக்கம்:திருக்கோலம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார் அநுபவம்

அடியார் என்பதற்கு அடையாளம் ஏதாவது உண்டா? சிவனடியார்கள் திருநீறும் உருத்திராட்சமும் அணிகிறர்கள். திருமால் அடியார்கள் திருமண் தரிக் கிருர்கள்; துள்சி மணி மாலே அணிகிருர்கள். அம்பிகையின் பக்தர்கள் குங்குமம் அணிகிருர்கள். இவை அவர்கள் தரித்துக்கொள்பவை. உள்ளத்தில் உண்மையான அன்பு இல்லாதவரும் இவற்றை அணியலாம்; அப்படி அணிந்து ஏமாற்றுகிறவர்களும் உண்டு. ஆகவே, அவற்றை அடை யாளம் என்று கொள்வதில் ஐயம் இருக்கிறது.

அடியார்கள் அம்பிகையை விரும்பித் தொழுகிருர்கள்; அம்பிகையே தலைவி என்றும், தாம் அவளுடைய அடிமைகள் என்றும் எண்ணி வழிபடுகிருர்கள். அவர் களுடைய உள்ளத்தில் உள்ளது பக்தி உணர்வு. அந்த உணர்வு கண்ணுக்குப் புலப்படாதது, கு ண ங் க ள் யாவையுமே புலப்படாதவை. ஆல்ை அந்தக் குணம் உள்ளவர்களேக் கண்டுபிடிக்க, இனம் கண்டுகொள்ள, சில அடையாளங்கள் உண்டு. கோபம் என்பது ஒரு குணம். அதை உடையவனுடைய கண்கள் சிவக்கும்; வார்த்தைகள் படபடவென்று வரும். இவை அவன் சினம் கொண்டிருக் கிருன் என்பதை அறிவிக்கும் அறிகுறிகள். இவற்றைப் பாவம் என்று வடமொழியிலும், மெய்ப்பாடு என்று தமிழிலும் சொல்வார்கள். உடம்பிலே தோன்றும் அறிகுறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/159&oldid=578098" இலிருந்து மீள்விக்கப்பட்டது