பக்கம்:திருக்கோலம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 திருக்கோலம்

இறைவியின் திருக்கோலம் முழுவதையும் அவர் தியா னித்தார். அப்போது அம்பிகை அவர் உள்ளத்தே எழுந் தருளிள்ை; தன் திருவுள் ளக் குறிப்பைக் காட்டினுள், அதை உணர்ந்து கொண்டார் அவர். "நீ இனி எதற்கும் அஞ் சாதே’ என்று அன்னே குறிப்பைக் காட்டினுள். அதன் பின்பு இந்தப் பேரடியாருக்குப் பயமே இல்லாமல் போயிற்று. எல்லாப் பயங்களிலும் பெரிது யம பயம். யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென் கடவேன்!’ என்று மணிவாசகரே அஞ்சுகிருர், -

அபிராமிபட்டர் இறைவியின் குறிப்பை அவள் திரு விழிப் பார்வையாலே உணர்ந்து கொண்டார்; யமபயம் தமக்கு இல்லே என்று உறுதி செய்துகொண்டார்,

யமன் எப்போது எப்படி வருகிருன் என்பது யாருக்கும் தெரியாது. அது மிகவும் இரகசியமாக இருக்கிறது, அவன் வரும் வழி மிகவும் நுட்பமானது. அவன் தம்மை அணுகும் வழியை அவர் அடைத்து விட்டார். அவன் வந்தால் முட்டி மோதிக்கொண்டு திரும்ப வேண்டியதுதான்.

நின் குறிப்பு அறிந்து

மறித்தேன், மறலி வருகின்ற நேர்வழி.

அம்பிகையின் தியானத்தால், அவள் உள்ளே தன் காட்சியை நல்கக் கண்டு களித்தார். அவள் கடாட்ச வீட்சண்யத்தைப் பெற்ருர். அவள் புன்முறுவலேத் தரிசித் தார். அவை ஒரு குறிப்பைத் தெரிவித்தன; யமனுக்கும் அஞ்சாத தைரியத்தைக் கொடுத்தன. அந்தத் தைரியமே. யமன் வரும் வழிக்கு அடைகல்லாக நின்றுவிட்டது. -

பயமில்லாத அபயானந்தத்தில், யமன் வரும் வழியைத் தடுத்துவிட்டேன்’ என்று எடுப்பாகப் பேசுகிருர், இந்தப் பெரியவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/16&oldid=577955" இலிருந்து மீள்விக்கப்பட்டது