பக்கம்:திருக்கோலம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 திருக்கோலம்

என்பதுவே மெய்ப்பாடு என்பதற்குப் பொருள். கோபம் என்ற குணத்துக்குரிய மெய்ப்பாடு கண் சிவத்தல் முதலியன. இப்படியே ஒவ்வொரு குணத்தையும் வெளிப் படுத்தும் மெய்ப்பாடுகள் இருக்கின்றன. பக்தி என்பது ஒரு - குணம். அதற்கு அறிகுறியான மெய்ப்பாடுகள், பாவங்கள், சில உண்டு. அவற்றைப் பெரியவர்கள் எடுத்துச் சொல்லி யிருக்கிறர்கள். -

அபிராமிபட்டர் அம்பிகையை விரும்பித் தொழும் அடியார்கனே நமக்கு இ ன ம் காட்டுகிருர். முதல் அடையாளம், விழிநீர் மல்கல். அம்பிகையை வழிபடும் உண்மையன் பர்கள் உருகுவார்கள்; அந்த உருக்கத்தின் விளைவாக எழுவது கண்ணிர். -

விரும்பித் தொழும் அடியார்

விழி நீர் மல்கி. இந்த மெய்ப்பாட்டைப் பக்தர்களின் நிலையைச் சொல் லும் யாவரும் எடுத்துரைக்கிறர்கள்.

'உடல்குழைய ன்ன்பெலாம் நெக்குருக விழிநீர்கள்

ஊற்றென வெதும்பி யூற்ற??

அன்பில்ை உருகி விழிநீர் ஆருக: என்று தாயுமானவர் சொல்கிறர்.

பின்பு, உடம்பெல்லாம் மயிர்க் கூச்செறியும்; அதைப் புளகாங்கிதம் என்பார்கள்; புளகம் போர்த்தல் என்றும் சொல்வார்கள்,

விழி நீர் மல்கி, மெய் புளகம் அரும்பி. இந்த இரண்டு மெய்ப்பாடுகளையும், இணைத்துச் சொன்னவர் பலர். - -

'அங்கைகொடு மலர்தூவி அங்கமது புளகிப்ப

அன்பினால் உருகி விழிநீர் ஆருக??

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/160&oldid=578099" இலிருந்து மீள்விக்கப்பட்டது