பக்கம்:திருக்கோலம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 திருக்கோலம்

பூவைத் தேடி வரும்போது ஆரவாரத்துடன் பறந்து வரும், மலரைக் கண்டு அதில் அமரும்போது ரீங்காரம் செய்யும்; பூந்தாதை ஊதும் போது முரலும்; இசை எழுப்பும். ஆனல் தேனை உண்ணத் தொடங்கிய பிறகு அதன் இசை நின்றுவிடும். அநுபவம் வரும்போது மோன நிலை உண்டாகி விடும். *

ஆனந்தம் ஆகி அறிவு இழந்து

சுரும்பிற் களித்து,

அடியார்கள் தாமாக நினைந்து செய்யும் செயல்கள் சில; பிறகு அவரிடத்திலே இன்ப அநுபவம் உண்டாகும்போது அமையும் மெய்ப்பாடுகள் சில: பிறகு அந்த இன்பத்திலே ஆழ்ந்து நிற்கும் நில உண்டாகும்; அந்த நிலையிலிருந்து மீளும்போது ஒருவகைத் தடுமாற்றம் ஏற்படும்.

அம்பிகையைத் தம் வழிபடு கடவுளாக எண்ணி, அவளிடம் அன்பு வைத்து விருப்பம் கொள்ளுகிருர்கள் அடியார்கள்; இது முதற் படி, அந்த விருப்பம் செயலாகப் பரிணமிக்கிறது. அன்னையைத் தொழுகிறர்கள். தொழுதல் என்பது இங்கே மனத்தில்ை தியானித்தல், வாக்கில்ை பரவுதல், உடம்பினல் வணங்குதல் என்ற மூன்றையுமே குறிப்பதாகச் சொல்லவேண்டும். 'தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி’ என்று பெரும்பாலும். தொழுதல் கையின் செயலாகவே வரும் என்று சொன்னல், உபலட் சனத்தால் மற்றக் கரணங்களின் வழிபாட்டையும் சேர்த் துக்கொள்ளலாம். விரும்புதலும் தொழுதலும் அடியார்கள் நினைந்து செய்யும் செயல்கள். . ... ', .

அடுத்தபடி அவர்களுடைய அன்பு வளர்ந்து பழுக்கும் . போது தம் முயற்சியின்றியே சில மெய்ப்பாடுகள் உண்டா கின்றன. அவை விழி நீர் மல்குதலும், மெய் புளகம் அரும்பு தலும், இதற்குமேல் ஆனந்த அநுபவம் பெற்று, அறிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/162&oldid=578101" இலிருந்து மீள்விக்கப்பட்டது