பக்கம்:திருக்கோலம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார் அநுபவம் 6. 155. -

எறிய, பொங்கி வரும் ஆனந்தமயமாக நின்று, ஜீவ போதத்தை இழந்து, தேனே உண்ட வண்டு போல மயங்கி, அப்பால் வார்த்தை குழறி, முன் சொன்னவை யாவும் பொருளுடையனவாகத் தருவதற்குக் காரணமான பித்தை உடையவராவார்; என்ருல் அப்படிச் செய்யும் அவ்வடியார் களின் வழிபாட்டு நெறியாகிய அபிராமி சமயம் நன்மையை உடையது.

அடியை இலக்காக்கித் தொழுபவர்கள் அடியார்கள். ததும்புதல்-உள்ளே அடங்காமல் பொங்குதல். ஆனந்தம் ஆகி-ஆனந்தம் வேறு தாம் வேறு என்று இல்லாமல் அதன் மயமாகி. அறிவு-இங்கே, ஜீவ போதம். சுரும்பின்வண்டைப்போல. முன் என்பது காலத்தைக் குறிக்காமல் தமக்கு முன் நிலையில் நிற்பாருக்கு என்று இடத்தைக் குறித்தது. அபிராமி சமயம்-அபிராமியை வழிபடும் நெறி. நன்றே: ஏகாரம், தேற்றம்; நன்றே.நன்றல்லவா என்று. வினவாகவும் கொள்ளலாம்.) -

அபிராமியை வழிபடுபவர்கள் ஆனந்த அநுபவம் பெறுவார்கள் என்பது கருத்து. |

இது அபிராமி அந்தாதியில் 94ஆவது செய்யுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/165&oldid=578104" இலிருந்து மீள்விக்கப்பட்டது