பக்கம்:திருக்கோலம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏது கவலை? f61

ஏறி நிற்கிருர் அபிராமியட்டர், கீழே என்ன நடந்தால் அவருக்கு என்ன? ஒருவன் ஒரு குன்றின்மேல் நிற்கிருன். அடிவாரத்தில் யானைகள் போரிடுகின்றன. அவன் கீழே இருந்தால் ஆபத்து வரும். குன்றின் மேலல்லவா நிற்கிருன்? யாஜன போரிடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக் கிருன். குன்றேறி யாசீனப்போர் கண்டற்ருல்’ என்று இந்த உவமையை ஆளுகிருர், திருவள்ளுவர். அழியாக குணக்குன்றின் சார்பு பெற்ற குழந்தையாகிய அபிராமி பட்டர் மிக உயரத்தில் இருக்கிருர் அவரை இந்தப் பிரபஞ்சச் சுகதுக்கங்கள் பாதிப்பதில்லை.

அழியாத குணக் குன்றே! என்று அம்பிகையை விளிக்கிறர். குணநிதி (604) என்று லலிதா சகசிரநாமம் அம்பிகையைச் சொல்லும்.

அம்பிகை கருணை நிறை ந் த வ ள். அவளுடைய கருணக்கு எல்லேயே இல்லே. எல்லே இல்லாததற்குக் கடலே உவமை சொல்வது வழக்கம். அவள் கருணைக்கடலாக விளங்குகிருள். அந்தக் கடலில் மிதக்கிறவர் அபிராமி பட்டர். நிலத்தில் மேடு பள்ளம் இருப்பது போலக் கடலில் இல்லை. அம்பிகையின் கருணைக் கடலில் துன்பமே

இல்லை. , , ... - -

அருட் கடலே!

என்று அடுத்தபடி அம்பிகையை அழைக்கிருர், கருணுரஸ் ஸாகரா’ என்று அம்பிகையை லலிதா சகசிரநாமம் கூறும் (926); அவ்யாஜ கருளுமூர்த்தி (992); தயாமூர்த்தி (581), லாந்த்ர கருணு (197) என்றெல்லாம் போற்றும்.

அபிராமி அம்பிகையின் குழந்தை இந்தப் பக்தர், அந்த அபிராமியே ஒருவருக்குக் குழந்தையாக அவதாரம் செய்திருக்கிருள். எங்கள் தாயே குழந்தையாக இருந்

தி-11 : . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/171&oldid=578110" இலிருந்து மீள்விக்கப்பட்டது