பக்கம்:திருக்கோலம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 திருக்கோலம்

திருக்கிருள். குழந்தையாக இருந்து தாய் தந்தையரின் வாத்ஸல்யத்தை அநுபவித்தவள் அவள்’ என்ற கருத் தோடு, -

இமவான் பெற்ற கோமளமே! என்று அடுத்தபடி சொல்கிருர், இமாசல அரசன் பெற்ற பார்வதி தேவி அவள். மிக்க மென்மையான வடிவமும், மென்மையான திருவுள்ளமும் கொண்டவள். கோமலா காரா, கோமலாங்கி என்று அவளுக்குத் திருநாமங்கள் உண்டு என்பதை முன்பே பார்த்தோம்.

அம்பிகையை இவ்வாறு அழைத்த குழந்தை தன் நிலையைச் சொல்கிறது. - - - -

  • நல்லது வரட்டும், தீயது வரட்டும்; எனக்கு ஒன்றும் தெரியாது. நல்லது வந்தால் அதை அறிந்து இன்புறுவதும், தீயது வந்தால் அதை அறிந்து துயரமுறுவதும் எனக்கு இப்போது இல்லே. அவை வருவதே எனக்குத் தெரியாதே! கீழே தரையில் நடந்தால்தானே கல் இருக்கிறது, பூ இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும்? அன்னையின் இடுப்பில் இருக்கின்ற குழந்தைக்கு என்ன தெரியும்??? என்று சொல்வதுபோல் அவர் கூறுகிருர்.

நன்றே வருகினும் தீதே விளைகினும்

நான் அறிவது ஒன்றேயும் இல்லை. ஏன்? எனக்குத்தான் ஒரு பொறுப்பும் இல்லையே! எல்லாவற்றையும் உனக்கே பாரம் என்று சமர்ப்பணம் செய்து விட்டேனே! என் மூட்டையையெல்லாம் உன்னிடம் கொடுத்துவிட்ட பிறகு அது கனக்கிறதே என்று அழ வேண்டிய அவசியம் ஏது’’’ o -

உனக்கே பரம். . . . . இப்படி வாயால் சொல்லிச் சும்மா இருந்துவிட்டாரா? எல்லாவற்றையும் அன்னைக்கு அர்ப்பணம் செய்துவிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/172&oldid=578111" இலிருந்து மீள்விக்கப்பட்டது