பக்கம்:திருக்கோலம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164: " . திருக்கோலம்

தீமையே விளைந்தாலும் அவற்றை அடியேன் சிறிதும் அறிவ தில்லை; எல்லாம் உனக்கே பாரம்; எனக்கு உள்ள உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் என்ன நீ ஆட்கொண்ட அப்போதே உன்னுடையன வென்று சமர்ப்பித்துவிட்டேன். இனி எனக்கு ஏது கவலை?

பரம்-பாரம். அன்றே: நெஞ்சறி சுட்டு. உனது:” தொகுதி ஒருமை. -

இந்தப் பாடலோடு, 'அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும், குன்றே அனேயாய் என்னே ஆட் கொண்ட போதே கொண்டிலேயோ, இன்ருேர் இடையூ றெனக்குண்டோ எண்டோள் முக்கண் எம்மானே, நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானே இதற்கு நாயகமே: என்ற அருமைத் திருவாசகப் பாடல் ஒப்பு நோக்கு தற்குரியது.

அம்பிகையை நம்பி ஆத்மசமர்ப்பணம் பண்ணினவர் களுக்குச் சுகதுக்கங்களுக்கு அற்பாற்பட்ட நிலே உண்டாகும் என்பது கருத்து. -

இது அபிராமி அந்தாதியில் 98-ஆவது பாட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/174&oldid=578113" இலிருந்து மீள்விக்கப்பட்டது