பக்கம்:திருக்கோலம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 திருக்கோலம்

சிவபெருமான், முருகன், இந்திரன், சூரியன், சந்திரன், அக்கினி, குபேரன், மன்மதன்,மனு, அகஸ்தியர், துர்வாசர், லோபாமுத்திரை என்னும் பன்னிருவர் அம்பிகையை வழி பட்டுப் பேறு பெற்றவர்களில் சிறந்தவர்கள்.

அபிராமிபட்டர் புன்னிரண்டு அடியார்களேச் சொல்லு கிருர். மேலே சொன்ன பன்னிரண்டு பேர்களில் சிலருக்குப் பதிலாக வேறு சிலரைச் சொல்கிருர், அவர் கூறும் உபாசகர்கள், சூரியன், சந்திரன், ஆக்கினி, குபேரன், இந்திரன், பிரமன், சிவபெருமான், திருமால், அகத்தியர், முருகன், கணபதி, காமன் என்பவர்கள். முன்னே சொன்னவர்களில் மனு, துர்வாசர், லோபாமுத்திரை என்னும் மூவருக்கும் பதிலாக, பிரமன், திருமால், கணபதி என்னும் மூவரைச் சொல்கிறர். இந்தப் பன்னிருவரைச் சொல்லிவிட்டு, இவர்கள் முதலிய எண்ணில்லாதவர்கள் அம்பிகை:ை வழிபடுவார்கள்’ என்று முடிக்கிருர், அதல்ை அந்தப் பன்னிரண்டோடு அடியார் வரிசை நின்றுவிடுகிறது. என்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லே எனத் தெரிய வரும், முன்னே சொன்னவர்களில் இந்தப் பாட்டில் சொல்லாமல் விட்டுப் போனவர்களும் வேறு எண்ணில் அடங்காதவர்களும் அம்பிகையின் உபாசகர் குழுவில் சேர்ந்தவர்களே. இனி அபிராமிபட்டர் சொல்வதைப்

ார்க்கலாம்.

ஆதித்தன், அம்புலி, அங்கி

என்று முச்சுடர்களையும் முதலில் சொல்கிருர், பானு, மண்டல மத்யஸ்த்தா (275), சந்த்ர மண்டல மத்யகா (240), வந்ஹறி மண்டல வாஸிநி (852) என்ற அம்பிகையின் திருநாமங்கள் அவள் மூன்று சுடர்களுக்கும் நடுவில் இருந்து ஒளிர்கிருள் என்பதைத் தெரிவிக்கின்றன. அவை அவளே வழிபட்டமையால் அவளுக்கு இருப்பிடமாக விளங்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/182&oldid=578121" இலிருந்து மீள்விக்கப்பட்டது