பக்கம்:திருக்கோலம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகையின் அடியார்கள் ! 73

பேற்றைப் பெற்றன என்று கொள்வதில் தவறு இல்லை. சந்த்ர வித்யா (239) என்பது லலிதாம்பிகையின் திருநாமங் களில் ஒன்று. சந்திரனுல் வழிபடப் பெற்ற வித்தையின் வடிவாக இருப்பவள்’ என்பது அந்தத் திருநாமத்துக்குரிய பொருள். அதனல் சந்திரன் வழிபட்டது தெரியவரும்,

குபேரன், அமரர்தம் கோன்

என்று அடுத்தபடி சொல்கிருர், ராஜராஜார்ச்சிதா? (305) என்பது அன்னேயின் திருநாமங்களில் ஒன்று. ராஜ ராஜன் என்பது குபேரனுடைய பெயர். அவல்ை அருச்சிக்கப் படுபவள் என்று அதல்ை தெரியவருகிறது. அம்பிக்கை எழுந் தருளியிருக்கும் சிந்த மணிக் கிருகத்தைச் சுற்றியுள்ள பிராகா ரங்களில் 14, 15-ஆம் பிராகாரங்களுக்கு இடையே பணிபத்திரன் முதலிய பகஷர்களுடன் இருந்து குபேரன் அம்பிகையை வழிபடுகிறன் என்று லலிதா ஸ்தவரத்னம் சொல்கிறது. - -> - .

போதில் பிரமன், புராரி, முராரி என்று மும்மூர்த்திகளேப் பிறகு சொல்கிருர்,

அம்பிகைக்கு, ப்ரம்ஹோபேந்த்ராதி தேவஸம்ஸ்துத வைபவா (58) என்று ஒரு திருநாமம் உண்டு. பிரமன், உபேந்திரளுகிய திருமால், இந்திரன் முதலிய தேவர்களால் நன்ருகப் புகழப்படும் வைபவத்தையுடையவள் அவள். முன்னே சொன்ன இந்திரனேயும், இங்குள்ள பிரமனையும், திருமாலேயும் அந்தத் திருநாமத்தில் காணலாம். இந்த மூவர் களும் அம்பிகையைத் தொழுவதை ஹரிப்ரம்ஹேந்த்ர லேவிதா (297) என்ற மற்ருெரு திருநாமமும் தெரிவிக் கிறது. .

புராரியாகிய சிவபெருமான் அம்பிகையைப் பேர்ற்று வதை இந்த ஆசிரியரே பல இடங்களில் சொல்லியிருக்கிறர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/183&oldid=578122" இலிருந்து மீள்விக்கப்பட்டது