பக்கம்:திருக்கோலம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 திருக்கோலம்

சிவாராத்யா (406), மஹாபைரவ பூஜிதா (281) என்பன அம்பிகை சிவபிரானல் ஆராதிக்கப்படுபவள் என்பதைப் புலப்படுத்தும் திருநாமங்கள்.

முரனை அழித்தவனகிய திருமால் அம்பிகையை வழி படுவதை, கமலாகூடி நிஷேவிதா (558) என்னும் திருநாமம். காட்டும்.

பொதிய முனி .காதிப் பொரு படைக் கந்தன்,

கணபதி, காமன்

என்று பின்னும் நால்வரை அம்பிகையின் அடியார்களாக எடுத்துச் சொல்கிருர், தாபஸாராத்யா (359) என்று ప్స్లోడu முனிவர்களால் அன்னே போற்றப்படுவதைச் சொல்லும் திருநாமத்தால், அகத்தியர் முதலிய முனிவர்கள் வழிபடு வதை உணரலாம். குமார கணநாதாம்பா (442) என்னும் நாமம் குமாரனுக்கும் கனநாதனுக்கும் தாயாக இருக்கும் செய்தியைச் சொல்கிறது. அவ்விருவரும் அன்னையைப் போற்றி அருள் பெறுவது இயல்பே.

ரீவித்யோபாஸ்கர்களில் கா ம ன் முக்கியமான இடத்தை வகிக்கிறவன். ரீ வித்யையில், தொடங்கும் எழுத்தின் வேறுபாட்டால் காதிவித்யை, ஹாதி வித்யை என்று இருவகை உண்டு. அவற்றில் காதி வித்யைக்கு ரிஷி காம்ராஜகிைய மன்மதன். காம பூஜிதா (375), காம லேவிதா (586) என்ற திருநாமங்கள் அம்பிகையைக் காமன் வழிபட்டதைக் குறிக்கும். . ... --

இவ்வாறு பன்னிரண்டு பேர்களைக் குறிப்பிட்டுவிட்டு, எஇப்படி அம்பிகையை உபாசனை செய்து சாதனை புரிந்து நலம் பெற்ற புண்ணிய மூர்த்திகள் எண்ணிக்கையற்ற வர்கள் என்று சொல்லி முடிக்கிருர் அபிராமிபட்டர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/184&oldid=578123" இலிருந்து மீள்விக்கப்பட்டது