பக்கம்:திருக்கோலம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகையின் அடியார்கள் 175

முதல் சாதித்த புண்ணியர் எண்ணிலர்

போற்றுவர் தையலேயே,

முதல்’ என்பதற்குள் தேவர்கள், முனிவர்கள், அரசர்கள், கற்புடை மகளிர் எனப் பல வகையினரும் அடங்குவர். கந்தர் வர்கள் வழிபடுவதால் கந்தர்வ ஸேவிதா (586) என்றும், மனு பூஜித்தமையால் ննgԶ: வித்யா (238) என்றும், தேவர்களாலும் முனிவர்களாலும்

துதிக்கப்படுவதால் தேவர்ஷிகண ஸங்காத ஸ்துTயமானத்ம

வைபவா (64) என்றும் அம்பிகைக்குத் திருநாமங்கள் உண்டு. அறிவுமிக்க ஞானிகள் வழிபடுவதால் புதார்ச்சிதா (825) என்றுக், நல்லவர்கள் வழிபடுவதால் சிஷ்ட பூஜிதா (4.11) என்றும், அந்தணர்கள் வணங்குவதால் த்விஜ ப்ருந்த நிஷேவிதா (423) என்றும் பேர்களைப் பெறுகிருள் அன்னே. அரம்பை முதலியோர் வழிபடுவதால் ரம்பர்தி வந்திதா (741) என்றும், இந்திரர்ணி தொழுவதால் புலோடி ஜார்ச்சிதா (347) என்றும், லோபா முத்திரை அருச்சிப்பு தால் லோபா.முத்ரார்ச்சிதா (647) என்றும் அம்பிகையைப் புகழ்வார்கள். அவளே மூவுலகும் வணங்குவதால் த்ரிஜகத் வந்த்யா (627) என்ற திருநாமம் வழங்குகிறது. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்; அதற்கு

எல்லேயே இல்லை,

அறுபத்து நாலு கோடி யோகினிகள் அம்பாளைச் சேவிக்கிருர்களாம்; மஹா சதுஷ்ஷஷ்டி கோடி யோகினி

கண லேவிதா (237) என்ற திருநாமம் அதைச் சொல்

கிறது.

இவற்றை யெல்லாம் எண்ணியே. எண்ணிலர் போற்றுவர் தையலேயே எனருர். தையல் என்பது பாலாம்பிகை என்ற திருநாமத்தை நினைவூட்டுவது; இளமையை உடையவள் என்பது பொருள். எல்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/185&oldid=578124" இலிருந்து மீள்விக்கப்பட்டது