பக்கம்:திருக்கோலம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 r திருக்கோலம்

வகையான அலங்காரங்களையும் உடையவள் என்றும் பொருள் கூறலாம். • '

ஆதித்தன், அம்புலி, அங்கி,

குபேரன், அமரர்தம்கோன், போதில் பிரமன், புராரி,

முராரி, பொதியமுனி, காதிப் பொருபடைக் கந்தன்,

கணபதி, காமன்முதல் சாதித்த புண்ணியர் எண்ணிலர்

போற்றுவர் தையலேயே, (சூரியன், சந்திரன், அக்கினி, குபேரன், தேவராஜ கிைய இந்திரன், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன், திரிபுரங்களை அழித்த சிவபிரான், முரனை அழித்த திருமால், பொதியமலையில் இருக்கும் முனிவராகிய அகத்தியர், பகைவரை மோதிப் பொருகின்ற வேலாயுதத்தை உடைய முருகன், கணபதி, மன்மதன் முதலாகச் சாதனை செய்து நலம்பெற்ற புண்ணியவான்கள் எண்ணில் அடங்காதவர்கள் பாலாம்பிகையாகிய அபிராமியை வழிபடுவார்கள்.

அங்கி-அக்கினி. போது-தாமரை. காதி-மோதி.)

அம்பிகையின் அடியவர்கள் கணக்கில் அடங்காதவர்கள் என்பது கருத்து.

அபிராமி அந்தாதியில் 97-ஆம் பாடல் இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/186&oldid=578125" இலிருந்து மீள்விக்கப்பட்டது