பக்கம்:திருக்கோலம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாமங்கள்

அபிராமியட்டர், குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம்’ என்று அம்பிகையின் திருவுருவத்தைத் தியானம் செய்வதைச் சொன்னர். அம்பிகை தனக்கு என்று ஒரு வடிவும் ஒரு பெயரும் உடையவள் அல்லள். ஆலுைம் பக்தர்களுடைய மனத்துள் புகுவதற்கு நாமரூபம் இல்லா விட்டால் முடியாதென்று, அவற்றை எடுத்துக் கொள் கிருள். மனிதர்கள் வெவ்வேறு மன இயல்புடையவர்கள். அந்த அந்த இயல்புக்கு ஏற்ற வகையில் அவள் திருவுருவம் பல கொள்கிருள். அப்படியே பல திருநாமங்களையும் ஏற்றுக் கொள்கிருள். அவளுடைய அனந்த கல்யாண குணங்களையும், அடையாளங்களையும் புலப்படுத்துபவை: & நாமங்கள். . ł لسلاسة لاقات قوات هي

அம்பிகையின் திருக்கோலத்தைப் பற்றிச் சொன்னவர், இப்போது அவளுடைய திருநாமங்களைப் பற்றிச் சொல்ல வருகிறர். அம்பிகைக்கு எத்தனையோ நாமங்கள் உண்டு. லலிதா சகசிரநாமம் ஆயிரம் திருநாமங்களைச் சொல்கிறது. அதில் இல்லாத பல திருநாமங்களே லலிதாத்ரிசதி சொல் கிறது. இந்த இரண்டிலும் சொல்லப்படாத பல திரு. நாமங்களை அம்பிகையின் தோத்திர வடிவாக உள்ள நூல்

களில் காணலாம். அந்த அந்தத் தலங்களில் அன்னை வேறு வேறு திருநாமம் உடையவளாக எழுந்தருளியிருக்கிருள். புதிய புதிய துதிகன் இயற்றும் கவிஞர்கள் புதிய புதிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/19&oldid=577958" இலிருந்து மீள்விக்கப்பட்டது