பக்கம்:திருக்கோலம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 திருக்கோலம்

அம்பிகையின் ஊடலத் தணிக்கும்பொருட்டு இறைவன் அவளே நெருங்குகிறன். அம்பிகை படுத்திருக்கிருள். பெருமான் அவளே அணுகி மெல்ல அவள் கால வருடுகிறன். அப்படியும் அம்பிகையின் ஊடல் தணியவில்லை. வேறு வகையில் அவள் உள்ளத்தைக் குழைக்க வழியில்லேயென்று கண்டு அவள் திருவடித் தாமரைகளே வணங்குகிறன்; தன் தலையில் அணிந்து கொள்கிருன்!

சங்கரன் திருக்கரத்தில் தீயையும் திருமுடியில் கங்கை யையும் வைத்திருக்கிருன். அம்மையின் திருவடி தாமரை போல மென்மையாகவும் தண்மையாகவும் இருக்கும். கையில் அக்கினியை ஏந்தியபடியே சிவபெருமான் அந்தத் திருவடியை வருட முடியுமா? அதை எங்கேயாவது வைத்து விட்டுக் கையில் அதல்ை உறைத்த சூடு நன்ருக ஆறின பிறகுதானே வருட முடியும்? அதை எங்கே மறைத்து வைத்தான்? - . . .

அதன் பிறகு பெருமான் அவளே வணங்குகிறன். அப்போது அவன் தலையில் கங்கை இருந்தால் மாற்ருளேக் கண்டு அம்பிகைக்குக் கோபம் வராதோ? ஊடல் பின்னும் அதிகமாகுமே யன்றிக் குறையாது. இதை அறிந்துகொண்டு. அந்தக் கங்கையையும் அப்பெருமான் எங்கேயாவது மறைத்து வைத்திருப்பான். அது எங்கே மறைந்தது?

- i

கையில்ை திருவடியை வருடத் தடையாக இருப்பது தீ; விழுந்து வணங்கும்போது தடையாக இருப்பது கங்கை, இந்த இரண்டையும் மறைத்து வைக்காமல் வந்திருந்தால் இறைவனுடைய முயற்சி பலிக்காது; அம்பிகையின் ஊடல் தீராது. ஆகவே அந்த இரண்டையும் எங்கேனும் மறைத்துவைத்த பிறகே இறைவன் தன் துணைவியின் ஊடலேத் தீர்க்க முனைந்திருப்பான். அவற்றை எங்கே மறைத்து வைத்திருப்பான்? அவைகளாக மறைந்து விட்டனவா? எங்கே மறைந்தன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/192&oldid=578131" இலிருந்து மீள்விக்கப்பட்டது