பக்கம்:திருக்கோலம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு ിസ

அம்பிகை பல பல உருவங்களில் எழுந்தருளி அன்பர் களுக்கு அருள் பாலிக்கிருள்; வெவ்வேறு திருவவதாரங் களைச் செய்கிருள். மிகவும் சூட்சுமப் பொருளாக உள்ள எம்பெருமாட்டி மிக மிக உயர்ந்த இடங்களில் இருக்கிருள். மெல்ல மெல்ல உலகத்தவருக்கு அனுக்கிரகம் புரிய இறங்கி வருகிருள். பிறகு தன்னுடைய அன்பர்களின் உள்ளே நின்று நிலவுகிருள். அப்படி வரும் எல்லா நிலையையும் கணக்கெடுத்துக் காட்ட யாரால் முடியும்?

ஒரு வகையாக அம்பிகையின் நான்கு வேறு நிலைகளை எடுத்துச் சொல்ல வருகிருர் ஆசிரியர். அவளே முதலில் பர்வதராஜ புத்திரி என்று குறிக்கிருர். பழ ங் காலத்தில் சிவபிரானுக்குப் பார்வதி தேவியை இமவான் தாரை வார்த்து அளிக்க, அப்பெருமானே அவள் மணந்து கொண்டாள். அம்பிகை தன் காதில் பொன்னலான கனத்த குழையை அணிந்திருக்கிருள், அந்தத் தோடு மாங்கல் யத்தைப் போன்றது. அம்பிகை நித்திய சுமங்கலியாதலின் அந்தக் கணங்குழை அவள் திருச்செவியில் என்றும் நீங்காமல் இருக்கும், பரமேசுவரனத் திருமணம் செய்துகொண்டதை நினைத்த அபிராமிபட்டருக்கு அந்தப் பெருமாட்டியின் நித்திய மங்கல வாழ்வு நினைவுக்கு வருகிறது. அதன் அடையாளமாகிய த டங் த் ைதயே குறிப்பிட்டு அம்பிகையை அடையாளம் காட்டுகிறர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/195&oldid=578134" இலிருந்து மீள்விக்கப்பட்டது