பக்கம்:திருக்கோலம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 திருக்கோலம்

கயிலாயருக்கு அன்றுஇமவான் அளித்தகனங்குழையே!

அந்தக் காதணியின் பெருமையைச் சங்கராசாரியார் செளந்தரிய லஹரியில் ஒரு சுலோகத்தில் சிறப்பித்திருக் கிருர். உன்னுடைய தாடங்க மகிமையில்ைதான் ஆலால விஷத்தை உண்டும் சிவபெருமான் அழிவில்லாதவராக இருக்கிருர் என்று அந்தச் சுலோகம் கூறுகிறது. ஆகவே கைலாசபதியாகிய பரமேசுவரனத் தன் பதியாகப் பெற்ற அம்பிகை எப்போதும் கணங்குழையை அணிந்தவளாக, நித்திய மங்கலமுடையவளாக, விளங்குகிருள். ஸுமங்கலி என்பது அம்பிகையின் திருநாமங்களில் ஒன்று.

இனி அம்பிகை எவ்வெவ்வாறு விளங்குகிருள் என்பதை ஆசிரியர் சொல்கிரு.ர். - -

அம்பிகை தன்னுடைய பரிவார தேவதைகளுடன் பரதேவதையாக இருக்கும் திருக்கோயிலுக்குச் சிந்தாமணிக் கிருகம் என்று பெயர். அதைச் சுற்றிக் கதம்பவனம் இருக் கிறது. அந்தக் கதம்பவனம் இருக்கும் இடம் ஒரு தீவு: அதற்கு மணித்வீபம் என்று பெயர். அதைச் சுற்றிக் கற்பகக் காடு இருக்கிறது. இவை யாவும் அமுதக்கடலின் நடுவே அமைந்துள்ளன. செளந்தர்யலஹரியில், லதா எலிந்தோர்மத்யே?’ எனத் தொடங்கும் சுலோகத்தில் இந்தச் செய்திகள் வருகின்றன. 'அமுதக் கடலின் நடுவில் கற்பக வனத்தினிடையே கதம்ப மரங்கள் அடர்ந்த இடத்தின் நடுவில் ஒரு மணிமண்டபம் உண்டு; அங்கே சிந்தாமணிக் கிருகம் என்ற திருக்கோயிலில் அம்பிகை இருக்கிருள் என்று பைரவ யாமளம் என்ற நூல் சொல்கிறது, . - - * . .

அம்பிகை எழுந்தருளிய ரீபுரத்தில் இருபத்தைந்து மதில்கள் உண்டு; இருபத்தைந்து தத்துவங்களக் குறிப் பவை அவை. அந்த மதில்கள் மணிகளாலும் தங்கம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/196&oldid=578135" இலிருந்து மீள்விக்கப்பட்டது