பக்கம்:திருக்கோலம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந - ன்கு நில 187°

வெள்ளி முதலிய உலோகங்களாலும் ஆனவை. தங்க மதிலுக்கும் வெள்ளி மதிலுக்கும் இடையே கதம்பவனம் இருப்பதாக லலிதா ஸ்தவரத்னம் என்ற நூல் கூறும்.

கதம்பவன வாளிநி (30) என்பது அம்பிகையின் ஆயிர நாமங்களில் ஒன்று. கதம்ப கானனவாஸா? என்று லலிதா திரிசதியில் வருகிறது.

இத்தகைய கதம்பவனத்தினிடையே அம்பிகை எழுந்: தருளியிருக்கிருள். நல்ல மரங்களிடையே வாழும் குயிலேப் போல அம்பிகை. அங்கே எழுந்தருளியிருக்கிருள். அம்பி கையின் குரல் மிகவும் இனிமையானது; குயிலின் ஒலியைப் போல இனிமையைத் தருவது. காட்டில் இருப்பதாலும், இனிய குரலே உடைமையாலும் அம்பிகையைக் குயிலாக, உருவகம் செய்வது பொருத்தமாக இருக்கும். அன்னே கதம்பவனக் குயில்,

குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை.

தன்னுடைய இராசதானியாகிய பூநீபுரத்தில் எழுந்: தருளியிருக்கும் திரிபுரசுந்தரியான அன்ன அவ்வப்போது பல அவதாரங்களை எடுப்பாள். அப்படி எடுத்த அவதாரங் களுக்குள் ஒன்று இமய அரசன் மகளாக, பார்வதியாக, தோற்றியது. பர்வதராஜ புத்திரியாக அவதரித்தமையால் அவளுக்குப் பார்வதி, ஹைமவதி, கிரிஜா, சைலேந்த்ர தநயா என்னும் திருநாமங்கள் வழங்குகின்றன. முருகப் பெருமான் திருவவதாரம் செய்வதற்கு இந்த அவதாரம் காரணமாக இருந்தமையால் இது மிகச் சிறப்பானது. இதல்ை அம்பிகையைப் பார்வதி என்று வழங்குவதே. மிகுதியாக இருக்கிறது. - -

இமாசலத்தில் திருவவதாரம் செய்தபோது அங்கே இளம் பெண்ஞ்க அம்பிகை விளையாடினள். அப்போது மயில் தன் தோகையை விரித்து அழகாக ஆடுவது போன்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/197&oldid=578136" இலிருந்து மீள்விக்கப்பட்டது