பக்கம்:திருக்கோலம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490 திருக்கோலம்

சிவபெருமான மணப்பதற்காக அன்னே பார்வதியாகத் திருவவதாரம் செய்தது தெரியும். சகசிரநாமம் முதலிய வற்றை உணர்பவர்களுக்கு அவள் கதிரவகை இருபபது புலகுைம். பக்தி செய்து உபாசிப்பவர்களுக்கு அவள் இதய கமலம், சகசிரார கமலம் முதலியவற்றில் இலங்குவது அநுபவத்தில் உணரவரும்.

யாவருக்கும் புலகுகாமல் எ ங் கே இருக்கும் பூநீபுரத்தில் எல்லாச் சக்திகளுக்கும் அதிதேவதையாக, எல்லா மூர்த்திகளுக்கும் தலைவியாக, எல்லாத் தொழில் களுக்கும் காரணிபூதையாக, இராஜராஜேசுவரி எழுந்தருளி யிருப்பதை முதலில் சொன் ர்ை. அங்கே அவளுடைய பரத்துவம் வெளியாகிறது. பிறகு தேவர்கள் வேண்டு கோளுக்கு இணங்கி ஒரு குமானத் தோற்றுவிக்கத் தானே இமாசவராஜன் குமாரியாகத் தோன்றிள்ை. இது அன்னேயின் விபவத்தைச் சொல்வது. பிறகு அவள் உலகத்தவருக்கு அநுக்கிரகம் செய்யச் சூரியனுக எழுந்தருளி நலம் செய்வதைச் சொன்னர், இது பிராகிருத சம்பந்தியாகும் அவள் வீ8லயைச் சொல்கிறது. கடைசியில் உபாசகர்களுடைய உள் ளக் கமலத்தில் வசிப்பதைச் சொன்னர். இது அன்னேயின் அந்தர்யா மித்துவத்தைத் தெரிவிக்கிறது. இந்த நான்கும் கருனே மிகுதியில்ை படிப்படியாக இறங்கி வருவதைத் தெரி விக்கின்றன. - -

கதம்பவனக் காட்டில் புகுவாருக்கு அடர்த்தியினல் ஒன்றும் தெரியாதபோது, குயில் தன் குரல் காட்டித் தன் இருப்பைப் புலப்படுத்துவதுபோல, அம்பிகை கதம்பவன வாசினியாக இருக்கிருள். பனி மூடிக்கிடக்கும் இமயத்தில். காணும் இடம் எல்லாம் ஒரே வெண்மையாக இருக்க, அங்கே வண்ண அழகு பொலிய மயில்ப்போலப் பார்வதி தேவியாக விளங்குகிருள். வானம் விரிந்து பரந்திருந்தும் ஒன்றும் தோன்றமல் இருக்கும்போது, அங்கே உதயமாகி யாவரும் காண எல்லாவற்றையும் புலப்படுத்தும் கதிர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/200&oldid=578139" இலிருந்து மீள்விக்கப்பட்டது