பக்கம்:திருக்கோலம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகக்காட்சி

- அம்பிகையை உபாசிப்பவர்கள் மூன்று கரணங் களாலும் அவளை வழிபடுவார்கள். புறத்திலே அன்னையின் திருவுருவத்தைக் கண்டு கண்டு களிப்பதோடு நில்லாமல், அந்த உருவத்தை உள்ளத்தே வைத்துத் தியானித்து இன்புறுவார்கள். பல காலம் தியானம் செய்து பழகுவதனல் தேவியின் திருவுருவம் சலனமின்றி உள்ளே தோன்றும். அலேயில்லாத தண்ணிரில் கீழே உள்ள பொருள்கள் தெளி வாகத் தெரிவதுபோல, சலனம் இல்லாமல் ஒருமுகப்பட்டுத் தியானத்தில் ஈடுபட்டவர்களுக்கு அம்மையின் திருவுருவம் தெளிவாகக் காட்சியளிக்கும்; கனவிலே தெளிவாகப் பொருள்கள் தோன்றுவது போலத் தோன்றும்.

தியான யோகம் கைகூடுவதற்குமுன் பயிற்சி பண்ணு கையில், மனம் தெளிவாக இருக்கும் வேளையில், ஆசனத்தில் அமர்ந்து கண்ணே மூடிக் கொண்டு அம்பிகையின் திருவுரு வத்தை மெல்ல மெல்ல நினைத்துப் பழகுவார்கள், அடியார் கள். முதலில் வடிவம் தெளிவாகத் தோன்றது. நாளடை வில், அப்பியாசம் முறுக முறுக, சில கணங்கள் மின்னல் கீற்றுத் தோன்றி மறைவது போலத் தோன்றி மறையும். பிறகு இன்னும் சிறிது நேரம் நின்று காட்சி தரும்.

அப்பியாசம் நல்ல பயனைத் தந்தபிறகு எந்தச் சம யத்தில் கண்ண மூடிக்கொண்டு பார்த்தாலும் தெளிவாக தி-18 - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/203&oldid=578142" இலிருந்து மீள்விக்கப்பட்டது