பக்கம்:திருக்கோலம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 திருக்கோலம்

அன்னயின் வடிவம் நெஞ்சினுள் வந்து இற்குத் இது முன் ஜன்ம சம்ஸ்காரத்தாலும் இந்தப் பிறவியில் செய்த அப்பியாச பலத்தாலும் உண்டாவது, அத்தகையவர்கள் இன்ன இடம், இன்ன காலம், இன்ன நிலை என்ற வரை பறையில்லாமல், எந்த இடத்திலும் எந்தக் காலத்திலும் உண்முக தரிசனம் செய்யலாம். பெட்டியில் வைத்துப் பூட்டிய பொருளை எப்போது திறந்தாலும் பார்க்க முடிவது போல, இந்த நிலையைப் பெற்ற அநுபூதிமான்களுக்கு எப்போது நினைத்தாலும் அம்பிகையின் திருவுருவம் நெஞ் சத்தில் வந்து நிற்கும். -

அபிராமிபட்டர் அந்த நிலையை அடைந்தவர்; நனவிற். கனவுபோல, விழித்திருக்கும் நிலையிலே கண்ணே மூடிய வுடன் அம்பிகையைத் தரிசிக்கும் பக்குவம் பெற்றவர். அந்த அநுபவத்தைச் சொல்ல வருகிருர். r

அம்பிகையின் வடிவம் எப்போது தினத்தாலும் என் உள்ளத்தில் வந்து தோன்றுகிறது என்கிருர்.

நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே.

அந்த வடிவத்தை வருணிக்கிறர். அன்னேயின் அங்க நலன்களைச் சொல்கிருர், அபிராமி அன்னேயின் குழந்தை பாகிய இந்த அன்பர் அவள் தாய்மையைக் காட்டும் தோற். றத்தையே முதலில் காண்கிருர். அவளுடைய நகில்களைச் சொல்கிருர். - - -

காமேசுவரனும் காமேசுவரியுமாக இணைந்து நிற்கும் கோலத்தை நினைத்து வழிபட்டவர் ஆசிரியர். அந்தப் பெரு மான் அம்மையை அன்போடு தழுவுகிருன். அவன் அணிந் திருக்கும் கொன்றை மாலேயோடு அன்னையைத் தழுவுகிறன். அவன் தழுவுகையில் அம்பிகை குழைகிருள்; இறைவனும் குழைகிருன்; அந்தக் கொன்றை மாலேயும் குழை கிறது. அம்மை தழுவக் குழைந்த பெருமாகைக் காஞ்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/204&oldid=578143" இலிருந்து மீள்விக்கப்பட்டது