பக்கம்:திருக்கோலம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகக்காட்சி - ig5

புரத்தில் எழுந்தருளியிருக்கிறன். இறைவன் தழுவும் பொழுது மாலை குழைவதுண்டு; முகைவாய்த்த முலைபாயக் குழைந்த நின் தார்: என்று கலித்தொகையில் வருகிறது. (கலித். 68: 」 '). -

இறைவன் தழுவியதல்ை குழைந்த தனங்களேயுடைய கொடி போல அம்மை காட்சி தருகிருள், நினைக்கும்போது முதலில் அவள் திருமார்பு தோன்றுகிறது.

குழையத் தழுவிய கொன்றையந்

தார் கமழ் கொங்கை வல்லி.

இந்த அந்தாதியின் காப்புச் செய்யுளில், தாரமர். கொன்றையும் என்று சிவபெருமான் திருமார்பில் அணிந்த கொன்றை மாலையை நினைந்து தொடங்கியவர், அந்தாதி யின் ஈற்றுச் செய்யுளாகிய இதிலும் அதை நினைக்கிருர். சிவபெருமான் அணந்ததேைல அம்பிகையின் நகில்களில் அந்தக் கொன்றை மாலேயின் மணம் வீசுகிறதாம்.

பிறகு, தேவியின் திருத்தோள்கள் காட்சி தருகின்றன. அவை மூங்கில்கஇனப் போல வழுவழுப்பாக இருக்கின்றன; மூங்கிலோடு போட்டி போட்டுக்கொண்டு அதன் அழகை வென்றுவிடுகின்றன, x. -

அம்பிகை துர்க்கையாகப் பச்சை வண்ணத்தோடு இருக்கும்போது வடிவாலும் வண்ணத்தாலும் அவள்

தோள்கள் மூங்கிலப் போல இருக்கும். இதை ஒரு பழைய செய்யுள் சொல்கிறது; - . .

அளவே வடிவொப்பதன்றியே பச்சை இளவேய்நிறுத்தாலும் ஒக்கும் துளவேய் கலேக்குமரி, போர்துளக்கும் கார் அவுணர் வீரம் தொலைக்கும்அரி ஏறுகைப்பாள் தோள்.??

அந்த நீண்ட நெடுந்தோளேச் சொல்கிருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/205&oldid=578144" இலிருந்து மீள்விக்கப்பட்டது