பக்கம்:திருக்கோலம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 திருக்கோலம்

கழையைப் பொருத திருநெடுந் தோளும்,

அம்பிகை தன் மேல் கைகளில் கரும்பு வில்லையும் மலர்ப் பாணங்களையும் ஏந்தியிருக்கிருள். மன்மதன் கையிலும் கரும்பு வில்லும் மலரம்புகளும் உள்ளன. அவை அம்பிகை அவனுக்கு வழங்கியவை. உலகிலுள்ள ஜீவர்கள் முறையாக இல்லறம் செய்து வாழவேண்டும். திவ்ய சுமங்கலியாகிய அம்பிகை காமேசுவரைேடு இணைந்து மக்கள் வாழும் வழியைக் காட்டுகிருள். அம் பி ைக இறைவனிடம் இணேயாமல் பிரிந்திருந்தால் உலகில் உள்ள ஜீவர்கள் ஆணும் பெண்ணும் உறவு கொள்ளாமல் இருந்து விடுவார்கள். பிறகு பரம்பரை வளராது. உலகமே நடை பெருது. இந்தத் திவ்ய தம்பதிகள் இணைவதனால்தான் உலகமே போகத்தைப் பெற்றுச் சந்ததியை விருத்தி செய்ய முற்படுகிறது. -

ஆண் பெண் உறவுக்குரிய காதலே உண்டாக்குகிறவன் காமன். அவனுக்கு அந்தத் தொழிலேத் தந்து அதற்குத் துணையாகக் கரும்பு வில்லேயும் மலரம்புகளேயும் அம்பிகை உதவியிருக்கிருள். ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் விரும்பும்படி பொருவன கரும்பு வில்லும் மலரம்பு

களும். அம்பிகையின் திருவுள்ளக் குறிப்பை உணர்ந்தே

மன்மதன் அம்புகளே எய்கிருன். அம்பிகை தன் கையில் வைத்துள்ள கரும்பும் மலரம்புகளும் மனம், பஞ்சதன் மாத்திரைகள் ஆகியவற்றின் வடிவங்கள்; அவற்றின் அம்ச மாக இருப்பவை. விருப்பத்தை எழுப்பக் காமன் பயன் படுத்தும் கரும்புவில்லும் மலரம்புகளும் அம்பிகை கையில் உள்ளவையே. அவற்றிற்கு மூலமாதலின், ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்பிக் காதல் செய்து இல்லறம் நடத்த அவைகளே மூலகாரணம் என்றுசொல்லி விடலாம். ஆகவே அந்த வில்லையும் அம்புகளையும் ஆணும் பெண்ணும் விழையும்படி பொரும் தன்மை வாய்ந்தன வாகச் சொல்கிருர் ஆசிரியர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/206&oldid=578145" இலிருந்து மீள்விக்கப்பட்டது