பக்கம்:திருக்கோலம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகக்காட்சி 1.97

கரும்புவில்லும் - விழையப் பொரு திறல் வேரியம்

பாணமும்.

அன்னையின் திருமார்பும், பிறகு தோளும், அப்பால் அவள் திருக்கரங்களில் வைத்துள்ள கரும்பும் மலர்களும் உண்முகத்தே தோன்றியதைச் சொன்னர்.

பிறகு அம்பிகையின் புன்முறுவலைச் சொல்கிருச். அது அம்பிகையின் வாத்ஸல்யத்தைக் காட்டுகிறது. தன் குழந் தையைக் கண்ட தாய் புன்னகை பூப்பாள். அம்பிகையின் உள்ளத்தே உள்ள மகிழ்ச்சியைக் காட்டுகிறது. அது. தன் தனயன் தன்னை நினைக்கிருன் என்பதை மன நிளறவுடன் நினைத்துப் புன்னகை பூக்கிருள் அம்மை,

வெண்ணகையும்.

இறுதியாக அவருடைய நெஞ்சிலே பதிந்து நிற்பவை அன்னேயின் திருவிழிகள். அருள் கொப்புளிக்கும் மடைகள் அவை, அவளுடைய அருட்கண்ணுேக்குக்கு ஏங்குவார்கள், பக்தர்கள், அம்பிகையின் திருவிழிகள் மான் கண்களைப் போல இருக்கின்றன. அகன்று நீண்டு உள்ளவை அவை. "மானே முதுகண்’ என்று முன்பு ஒரு முறை அந்தக் கண்ணேச் சொல்லியிருக்கிரு.ர். -

அம்பிகையின் திருவுருவத்தை அங்க அடையாளங் களோடு காட்ட வந்தவர், இப்போது இறுதியிலே மறவாமல் உள் ளத்தே பதிந்த அந்த விழிகளைச் சொல்கிருர்.

உழையைப் பொரு கண்ணும்.

அம்பிகையின் அங்கங்களில் நகிலேயும், தோளேயும், கரும்பையும், மலரையும், புன்முறுவலேயும் சொல்லிவிட்டு முத்தாய்ப்பாகக் கண்களைச் சொல்கிருர். கருணையூற்ருகிய அந்தக் கண்ணே நினைக்கும்போது உள்ளம் உருகும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/207&oldid=578146" இலிருந்து மீள்விக்கப்பட்டது