பக்கம்:திருக்கோலம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாமங்கள் 11

வருணிக்கிருர். பிறருக்கு அச்சம் தரும் வகையில் போர்க் களத்தில் நடமாடும் கொற்றவையைப் பயிரவி என்று குறிப் பிடுகிருர். துர்க்கையாகிய மயான வாசினியைப் பயிரவி என்று சொல்வது உண்டு. பரணி நூல்களில் அந்த நாமம் பயின்று வரும். -

அந்தப் பயிரவி என்ற திருநாமத்தை முதலில் சொல்லி விட்டு, அடுத்தபடி பஞ்சமி என்ற நாமத்தைச் சொல்கிருர், ஆசிரியர். அந்தச் சொல்லுக்கு ஐந்தாவதாக இருப்பவள் என்று பொருள், பிரமன், திருமால், ருத்திரன், மகேசு. வரன், சதாசிவன் என்ற ஐந்து மூர்த்திகளில் சதாசிவன் எல்லாரினும் மேலானவன். அவனுடைய சக்தியாக இருப்பு தல்ை, அன்னேக்குப் பஞ்சமி என்ற திருநாமம் உண்டா யிற்று. இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி, ஆதி சக்தி, பராசக்தி என்ற ஐவகைச் சக்திகளினும் தலேயாய பராசக் தியே பஞ்சமி, படைப்பு, அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐவகைத் தொழில்களையும் செய்யும் சக்தி, களில் அருள&லச் செய்யும் அநுக்கிரக சக்தி பஞ்சமி, பஞ்ச மகாரங்களில் இறுதியாகிய ஆனந்தவடிவமாக இருப்பவளா தலின் இப்பெயர் வந்ததென்பதும் ஒரு கருத்து. லலிதா சகசிரநாமத்தில் 948-ஆம் திருநாமமாக வருவது இது. நீேடு பஞ்சமி சூலினி மாலினி’, கவுரி பஞ்சமி ஆயீ மாயி’, என்று திருப்புகழிலும், படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி’, கருத்திற் பயிலும் வராகிஎம் பஞ்சமி’, :பாடகச் சீறடிப் பஞ்சமி என்று வராகி மாலேயிலும் (4,9, 19) இந்தத் திருநாமத்தைக் காணலாம்.

மூன்ருவதாக அபிராமிபட்டர் எடுத்துச் சொல்வது. பாசாங்குசை என்ற திருநாமம்; ராகஸ்வரூப பாசாட்யா, க்ரோதாகாராங்குசோஜ்வலா (8, 9) என்று லலிதா சகசிர நாமத்தில் வரும் இரண்டு திருநாமங்களையும் இணைத்து, அமைத்தது இது. அம்பிகை தன் கீழ்க் கைகள் இரண்டில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/21&oldid=577960" இலிருந்து மீள்விக்கப்பட்டது