பக்கம்:திருக்கோலம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பய ன்

அபிராமி அன்னையை நூறு பாடல்களால் பாடி அபிராமி அந்தாதியை நிறைவு செய்த அபிராமியட்டர், நூலுக்குப் பயனக ஒரு பாடலைப் பாட எண்ணினர். ஒரு நூலைத் தொடங்குவதற்கு முன்னல் காப்புச் சொல்லிப் பிறகு நூலேப் பாடி இறுதியில் பயனச் சொல்வது ஒரு மரபு. அந்த வகையில், சீர் அபிராமி யந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே, காரமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே?’ என்று காப்புச் செய்யுளைப் பாடினர். அப்பால் அந்தாதியை, உதிக்கின்ற செங்கதிர்’ என்று தொடங்கினர், முடிக்கும் பொழுது’ 'உதிக்கின்றவே?? என்று மண்டலிக்கும்படி முடித்து அந்தாதியின் இலக்கணம் நன்கு அமையும்படி செய்தார். - r

முதலில் சமுதாய சோபையாகிய பிழம்பழகைச் சொல்லி, கடைசியில் அம்பிகையின் அங்கங்களில் சில வற்றைச் சொல்லி, முடிந்த முடியாக அன்னேயின் அருள் கொப்புளிக்கும் கண்ணில் தம் நினைவை நிறுத்திப் பாடினர் ஆசிரியர். -

இப்போது நூல் நிறைவேறிவிட்டது. நூற்பயகை ஒரு செய்யுளைப் பாடவேண்டும். பலசுருதி என்று அதைச் சொல்வார்கள். பொதுவாக நூலே முடிக்கும்போது பயனைச் சொல்கிறவர்கள். இந்த நூலைப் படிப்பவர்கள் இன்ன இன்ன பயனைப் பெறுவார்கள்’ என்று சொல்வது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/210&oldid=578149" இலிருந்து மீள்விக்கப்பட்டது