பக்கம்:திருக்கோலம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 திருக்கோலம்

கொண்டவனும் அல்லன். ஏதோ துணிவினுல் பாடினேன். அன்னேயினிடம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலினுல் பாடினேன். இதில் உள்ள பிழைகன் யெல்லாம் மறைத்துக்கொண்டு நிற்பவை அன்னேயின் திருநாமங்களும் புகழும் என்றெல்லாம் அவர் எண்ணங்கள் -ஓடின.

அப்படியால்ை நூற்பயன் சொன்னவர்களெல்லாம் அகங்காரிகளா? என்று நாம் கேட்கிருேம்.

'அவர்கள் பெரியவர்கள்; அருள் பெற்றவர்கள். அவர் கள் சொல்லலாம். ஆணே நமதே என்று பாடும் வல்லமை யுடையவர்கள் அவர்கள். ஓங்கி உயர்ந்த மலே மேகத்தைத் தாங்கி நிற்கிறது. சிறிய கரடு மேகத்தைத் தாங்குமா? இரண்டும் கல் என்று சொல்லப்பட்டாலும் மலே எங்கே? கரடு எங்கே?* .

'அப்படியானுல் நூற்பயணுக நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்???

'இந்த நூலே நான் பாட முயன்றேன். என் தாய் உள்ளிருந்து பாடும்படி பணித்தாள். ஏதோ ஒருவிதமாகப் பாடி முடித்தேன். இந்தப் பாடல்களின் குறைகளெல்லாம் அவள் அரும் புகழால் மறைந்துவிட்டன. இதை அவள் ஏற்றுக் கொண்டாள் என்பதைச் சரபோஜி மன்னர் மன மாற்றத்திலிருந்து உனர்ந்து கொண்டேன். அவள் அருள் இருந்தால் அமாவாசையும் பெளர்ணமியாகும்; கடலும் மலையாக உயரும்; புழுவும் யானையாகும். ஒன்றுக்கும் ப்ற்றத என்ன இந்த நூலைப் பாடும்படி வைத்தாளே, அதுவே பெரிய அதிசயம் அல்லவா? ஆகவே, என் பாட்டு இத்தகைய தென்று சொல்ல என் மனம் இடந்தரவில்லை. அன்னேயின் பெருமையைத்தான் நினைக்கிறேன். எனக்கு வந்த அபவாதத்தைப் போக்கி இந்த நூலே நிறைவேற்றி வைத்தாளே, அந்தப் பேரருகள நினைக்கிறேன். அவளைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/212&oldid=578151" இலிருந்து மீள்விக்கப்பட்டது