பக்கம்:திருக்கோலம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன் - 205

அம்மா என்ற திருநாமத்தை நாம் அடிக்கடி சொல் லிப் பழகியிருக்கிருேம். நம்மைப் பெற்ற அம்மாவைக் குழந்தைப் பிராயத்திலிருந்து அடிக்கடி அழைத்து அந்தச் சொல்லே உச்சரித்திருக்கிறுேம். துன்பம் வந் தாலும் இன்பம் வந்தாலும், அம்மா! என்று சொல் கிருேம். அது உணர்ச்சியின் வெளியீடாக இருக்கிறது. அது பூரீ மாதாவைக் குறிக்கும் திருநாமம். அதை உச்சரிக்கும் போது உலகமெல்லாம் பெற்ற தாயாகிய அம்மாவை நினைத்துக் கொண்டால் போதும், சொல் வந்து விட்டது; அதன் பொருள் இன்னது என்று தெரிந்து நினைத்தால் போதும். நமக்குப் பழக்கமான சொல் அது; அதன் பொருள் ஜகதம்பிகை என்று உணர்ந்து விட்டால், நாம் அவள் திருநாமத்தைச் சொன்னவர்க ளாவோம்.

உலகிலுள்ள எல்லா மக்களுக்கும் அம்மா’ என்ற சொல்லில் அன்பும் உணர்வும் இணைந்திருப்பது தெரியும். அத்தனே எளிய திருநாமத்தை முதலில் லலிதா சகசிரநாமம் சொல்கிறது.

பக்தர்கள் அம்மா என்று சொல்லும்போது பராசக்தி யைத்தான் நிஜனப்பார்கள். மற்ற அம்மாக்கள் சில காலம் இருந்து மறைகிறவர்கள்; இந்த உடலுக்குத் தாய்கள். ஆளுல் பராம்பிகையோ எல்லா உயிர்களுக்கும் எல்லாக் காலத்திலும் அன்னேயாக, அருள் சுரப்ப வளாக, இருக்கிருள்.

ஆகவே, நீ மாதா என்று தொடங்கும் லலிதா சகசிர நாமத்தைப் போலவே அபிராமியட்டர் பயனைக் கூறும் இந்தப் பாட்டில் அம்மா என்ற சொல்லேயே முதலில் வைக் .கிருர் அன்ன. &BITuون யாய், தாய், அம்மை, மாதா, தள்ளை, அம்பிகை, அம்பா என்று தாயைக் குறித்கும் ಖ சொற்கள் இருந்தாலும் அவற்றை அவர் சொல்லவில்லை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/215&oldid=578154" இலிருந்து மீள்விக்கப்பட்டது