பக்கம்:திருக்கோலம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 திருக்கோலம்

நாகரிகம் தெரியாத ஏழை மக்கள் எந்தச் ೧Frುಖ rಿನಿ தம் தாயைக் குறிப்பார்களோ அந்தச் Qrಮೆಶಿಖಕಿ, தொல்கிறர். அவள் ஏழைகள் முதல் இந்திரன் வரைக்கும் உள்ள யாவருக்கும் தாய் அல்லவா? - .

நாட்டுப்புறங்களில் உள்ள மக்கள் தாயை ஆத்தாள் என்று சொல்வார்கள். அந்தச் சொல்லப் பயன்படுத்து கிருர் அபிராமிபட்டர்.

ஆத்தாளே. இவ்வாறு பெரியவர்கள் இழிசினர் வழக்கை வழங்க லாமோ என்று தோன்றும். முருகப்பெருமானுடைய திருவருளே நிரம்பப் பெற்ற அருணகிரிநாதர் திருப்புகழில் ஆத்தாள் மால்தங்கச்சி’ என்று பாடியுள்ளார்.

காப்புச் செய்யுளில், 'உலகேழும் பெற்ற அபிராமி?? என்று அன்னேயாகச் சொன்னவர் பயனிலும் அதைச் சொன்னர். அங்கே அபிராமி என்று திருக்கடவூரில் எழுந் தருளிய அம்மையின் திருநாமத்தைச் சொன்னவர் பயனேச் சொல்லும் இந்தப் பாட்டிலும் மறவாமல்,

எங்கள் அபிராம வல்லியை என்று சொல்கிருர்,

திருக்கடவூரில் எழுந்தருளியுள்ள அபிராமியன்னையைப் பாடியது இந்த அந்தாதி. என்ருலும் பராசக்தியாகிய இராஜராஜேசுவரியின் புகழையே நூல் முழுவதும் பாடினர். அபிராமி என்ற திருநாமத்தை ஒவ்வொரு பாடலிலும் வைக்கவில்லே. காப்புச் செய்யுளில், சிரபிராமி: என்று. சொல்லி, முதல் செய்யுளில், அபிராமி என்றன் விழுத். துணையே’ என்று பாடினர். பிறகு, 25-ஆம் பாட்டில், *உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே’ என்றும், 69-ஆம் பாட்டில், அபிராமி கடைக்கண்களே என்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/216&oldid=578155" இலிருந்து மீள்விக்கப்பட்டது