பக்கம்:திருக்கோலம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாமங்கள் 15

என்று கூறி முடிக்கிருர் ஆசிரியர். இந்த நாமங்கள் நாகைக் கற்பித்து அமைத்தவை அல்ல. பெரியவர்கள், அறிந்த வர்கள், அம்பிகையின் அன்பர்கள் இவற்றை எடுத்துச் சொல்வார்கள். அவர்கள் நான் மறையிலிருந்து அவற்றை உணர்ந்து செப்பினர்கள். அவற்றை ஒதுவார்களுடைய செயிர்கள் (குற்றங்கள்) அவியும் (அழியும்) என்று சொல்கிருர், -

பயிரவி பஞ்சமிபாசாங்

குசைபஞ்ச பாணிவஞ்சர் உயிர்அவி உண்ணும் உயர்சண்டி

காளி ஒளிரும்கலா வயிர விமண்டலி மாலினி

சூலி வராகிஎன்றே செயிர்அவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே.

(செயிர் அவி திருநாமங்கள், நான்மறை சேர் திருநாமங்கள் என்று கூட்டிப் பொருள் கொள்க, செப்புவரே என்ற பயனிலைக்கு எழுவாயாக ஆன்ருேர், அறிஞர், அன்பர் என்பவற்றில் ஒன்றை வருவித்து உரைத்துப் பொருள் கொள்க. அது தோன்ரு எழுவாய்.)

இது அபிராமி அந்தாதியில் 77-ஆவது பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/25&oldid=577964" இலிருந்து மீள்விக்கப்பட்டது