பக்கம்:திருக்கோலம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணில் எழுதிய ೧g೧ುಲು

இறைவியின் திவ்ய ரூபலாவண்யத்திலே மனம் பறி கொடுத்த பக்தர்கள் அந்த வடிவத்தை எப்பொழுதும். தியானித்துக் கொண்டே இருப்பார்கள். மனம் பல விதமாக அலேயாமல் இருக்கவேண்டுமானல் அதற்கு ஏதாவது வேலை யைக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். பொல் லாத குழந்தை ஒன்று கத்தியை வைத்துக் கொண்டு விளை யாடுகிறது. அது தன் கையை வெட்டிக்கொள்ளுமே என்று தாய் அஞ்சுகிருள். அதைக் கீழே போட்டுவிடு என்று சொன்னல் முரட்டுக் குழந்தை போடாது. கத்தியைப் பிடுங்கப்போல்ை இறுகப் பிடித்துக் கொண்டு தன் கையைக் காயப்படுத்திக்கொள்ளும். அவ்வாறு செய்யாமல் ஓர் அழகிய பொம்மையை அந்தக் குழந்தையின் கையில் கொடுத்தால் கத்தியை நழுவவிட்டுப் பொம்மையைப் பிடித்துக்கொள்ளும். - * . ."

மனத்தை வழிப்படுத்த வேண்டுமானல், நீ சும்மா இரு என்று சொல்லி அடக்க முடியாது. தன் போக்கில் அது போவதை மாற்ற வேண்டுமானல் அதற்கு ஏதாவது நல்ல வேலையைக் கொடுக்க வேண்டும். அன்னேயின் திருவுருவத்தைக் கண்டு அதனே அடிக்கடி நினைத்துப் பார்க்க வேண்டும். எளிதில் அந்த வடிவம் உள்ளத்தில் படியாது. ஒரு கணம் படிந்தால் அடுத்த கணம் மனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/26&oldid=577965" இலிருந்து மீள்விக்கப்பட்டது