பக்கம்:திருக்கோலம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணில் எழுதிய வடிவம் 17

எங்காவது போய் நிற்கும். இடைவிடாமல் அடுத்தடுத்துத் திருவுருவத் தியானத்தைச் செய்ய வேண்டும். r

அப்படித் தியானம் செய்து பழகினல், நினைக்கும் போதெல்லாம் அந்த வடிவத்தை உள்ளத்திலே ஒருவாறு காண முடியும். அந்த வடிவம் உள்ளே பதியப் பதியக் கண்ணிலே வந்து நிற்பது போன்ற உணர்வு உண்டாகும்.

நாம் ஏதேனும் அழகிய வடிவத்தைக் கண்டு மனம் ஈடு பட்டால், இன்னும் என் கண்ணிலே நிற்கிறது’ என்று சொல்லுகிருேம் அல்லவா? உள்ளத்திலே அந்த வடிவம் நன்ருகப் பதிந்தால் அத்தகைய நிலை உண்டாகும்.

- அபிராமி பட்டர் புறக்கண்ணுல் அபிராமியின் பேரழகைக் கண்டு கண்டு களித்தவர்; உள்ளத்திலே வைத்துத் தியானித்துப் பழகியவர். அதன் பயனுக எம்பெருமாட்டியின் திருவடிவம் முழுவதும் தம் கண்ணிலே நிற்பது போன்ற அநுபவம் ஆவருக்கு ஏற்பட்டிருக்கிறது. 'என்னுடைய இரண்டு விழிகளிலும் அன்னேயின் அங்க லாவண்யத்தை எழுதி வைத்தேன்’ என்று சொல்கிருச். உள்ளே அம்பிகையைத் தியானித்துக்கொண்டே விழித்துப் பார்த்தால் கண்முன்னே உள்ள பொருள் ஏதும் தோன்றுவ தில்லை. எல்லாம் அவள் மயமாகவே காட்சியளிக்கின்றன. மஞ்சட்காமாலே வந்தவனுக்கு எல்லாம் மஞ்சளாகத் தோன்றுவதுபோல் உள் ளத்தே வைத்த வடிவத்தின் அழகு பொங்கித் ததும்பிக் கண்ணில் வழிவதல்ை கண் விழித்திருந்தாலும் வேறு காட்சியே தெரிவதில்லை, .

விழித்த கண்குரு டாத்திரி வீரரும் பலரால்?? என்று உண்முக நோக்கம் உடைவர்களேச் சொல்வார்கள். இந்த அன்பரோ உள்ளும் புறம்பும் அன்னையையே காண் கிருர், கருத்திலே எழுதி வைத்ததையே கண்ணிலும் எழுதி வைக்கிருச். - ,3,<°。””、 .

2 سے تھے .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/27&oldid=577966" இலிருந்து மீள்விக்கப்பட்டது