பக்கம்:திருக்கோலம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 திருக்கோலம்

எழுதி வைத்தேன் என் துணை விழிக்கே என்று பாடுகிறர்.

அம்பிகையின் திருவடிவிலுள்ள அங்கங்களைக் காண் கிருர். அந்தப் பெருமாட்டி உலகத்துக்கெல்லாம் தாய். ஞானமே பாலாக நிறைந்த தனபாரங்களை உடையவள். தாயின் திருமார்பில் குழந்தைக்குக் கண் செல்லும். அபிராமிபட்ட ராகிய குழந்தை தாயை இனம் கண்டு கொள்ளும்போது அந்த ஞானப்புனல் பூரித்த கலசம் முதலில் நினைவுக்கு வருகிறது. பெண்களிலே அன்னேயின் அழகு வேறு யாருக்கு வரும்? அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி’ என்று இவ்வாசிரியரே பாடுகிருர். பெண்களின் அழகை எடுத்துக்காட்டுவன அவர்களுடைய நகில்களும் கண்களும் புன்முறுவலும், பருவ அழகின் பொலிவை வெளிப்படுத்துபவை நகில்கள். முகத்துக்கு அழகு தருவன. விழிகளும் புன்னகையும். அம்பிகையிடம் உள்ள இந்த மூன்றையும் இந்தப் பக்தர் சொல்கிறர். .

தன பாரங்களே, அம்பிகையின் திருநாமத்தைச் சொல்லும்போது அடைமொழியாக்கிச் சொல் கிருர்,

அன்னேயின் தனங்கள் கடைந்த தந்தச் செப்புக்களைப் போல இருக்கின்றன; ஒளி விடுவதல்ை தங்கக் கலசங்களைப் போலவும் ஒளிர்கின்றன. அவற்றின்மேல் கலவைச் சந்தனக் குழம்பை அப்பிக் கொண்டிருக்கிருள். .

செப்பும் கனக கலசமும் .

போலும் திருமுலைமேல் அப்பும் களப அபிராமவல்லி . இவ்வாறு அடையாகச் சொல்லித் திருநாமத்தைக் கூறிஞ்லும் அவருடைய தியானத்துக்குரிய வடிவில் இந்த

அங்கங்களின் பொலிவை அவர் கண்டு கண்டு குழந்தைக்கு உரிய நிலையை அடைகிருர் என்று கொள்ள வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/28&oldid=577967" இலிருந்து மீள்விக்கப்பட்டது