பக்கம்:திருக்கோலம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணில் எழுதிய ഖ4ഖ് 19

இனிமேல், அவர் கண்ணில் எழுதி வைத்தவற்றைச் சொல்ல வருகிருர், -

அம்பிகையின் கண்ணே நினைக்கிருர், கண்ணின் கடையில் அருள் வழியும். அபிராமி கடைக் கண்களே’ என்று பாடினவர் அல்லவா இவர்? அந்தக் கடாட்ச வீட்சண்யத்தைப் பெற்றவர், இப்போது அதை நினைக் கிருர். அம்பிகையின் திருவிழி நீளமானது; காதளவோடிய கண். அதன் கடைசியை, அதாவது கடைக்கண்ணேக் காதுக்கு அருகில்தான் பார்க்கவேண்டும். கோயில் வாயிலேக் கண்டு உள்ளே புகுவாழைப் போல முதலில் காதைக் கண்டு அதனருகில் உள்ள கடைக்கண்ணேக் கானுகிருர்,

அம்பிகை தன் மேற்காதில் கொப்பையும், கீழ்க் காதில் தோடு அல்லது குழைய்ையும் அணிந்திருக்கிருள். கொப்பு என்பது மேல்காதில் அணிவது. முத்தால் ஆன கொப்பு அது. கீழுள்ள குழை கண்ணின் கடையோடு ஒட்டி ஒளி வீசுகிறது. அது வயிரத்தால் ஆனது. அந்தக் குழையைத் தாடங்கம் என்று வடமொழியில் சொல் வார்கள். -

அம்பிகையின் இரண்டு காதுகளிலும் சூரியனும் சந்திரனுமே தாடங்கங்களாக இருக்கிருர் களாம். தாடங்க :புக ளிபூத தபனேடுபமண்டலா’ (22) என்று லலிதா சகசிர நாமம் இந்தச் செய்தியைச் சொல்கிறது. -

அபிராமிபட்டர் அந்தக் காதணிகளை நினைக்கிருர்,

அபிராமவல்லி அணி தரளக் கொப்பும் வயிரக் குழையும்.

காதணிகளை நினைத்தவுடன் அருகில் உள்ள கடைக் கண் தெரிகிறது. அது வளமான கடைக்கண். அருளால் பொலிவு பெற்றதாதலின் அதைக் கொழுமையான தென்கிறர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/29&oldid=577968" இலிருந்து மீள்விக்கப்பட்டது